தொடர்ந்து 2வது மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்கும் பிரஜ்னேஷ்.. மியாமி ஓபன் தொடருக்கு தகுதி!!
மியாமி : இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீரராக மாறி வரும் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன் மியாமி ஓபன் டென்னிஸ் தொடரின் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்.
இதன் மூலம், தொடர்ந்து இரண்டாவது மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்கும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார். முன்னதாக இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் தொடரின் மூன்றாம் சுற்று வரை முன்னேறிய பிரஜ்னேஷ், அடுத்து மியாமி ஓபனில் ஆடவுள்ளார்.

இந்தியன் வெல்ஸ் தொடரில் முக்கிய வெற்றிகளை பதிவு செய்த பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், அந்த தொடரின் முடிவில், சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 84ஆம் இடம் பிடித்து அசத்தினார்.
அடுத்து மியாமி ஓபனில் நடைபெற்ற இரண்டு தகுதிச் சுற்று போட்டிகளிலும் வெற்றி பெற்று, தொடரில் ஆடும் வாய்ப்பை பெற்றுள்ளார். அந்த தொடரின் முதல் சுற்றில் ஸ்பெயினின் ஜேம் முனார்-ஐ வரும் வெள்ளிக்கிழமை சந்திக்க உள்ளார்.
Story first published: Thursday, March 21, 2019, 16:31 [IST]
Other articles published on Mar 21, 2019


Click it and Unblock the Notifications