Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ரியோ ஒலிம்பிக்ஸ்: வீனஸ், செரீனா வில்லியம்ஸ் சகோதரிகள் அதிர்ச்சி தோல்வி

ரியோ : ஒலிம்பிக் போட்டியில் டென்னிஸ் பெண்கள் இரட்டையர் பிரிவில் தங்கம் வெல்வார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்காவின் வில்லியம்ஸ் சகோதரிகள் முதன்முறையாக அதிர்ச்சி தோல்வியை சந்தித்துள்ளனர். டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் முதல் சுற்றிலேயே தோல்வியடைந்து வெளியேறியுள்ளார்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 5 முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றன. இரண்டாம் நாளான ஞாயிறன்று பெண்களுக்கான இரட்டையர் போட்டியில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் மற்றும் வீணஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் இணை, கட்ச் குடியரசை சேர்ந்த சபரோவா மற்றும் பார்போரா ஸ்ரைகோவா இணையோடு ஞாயிறுக் கிழமை மோதியது.

இதில் சிறப்பாக விளையாடிய கட்ச் குடியரசு வீராங்கனைகள் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் அமெரிக்க வில்லியம்ஸ் சகோதரிகளை வீழ்த்தி அமெரிக்க டென்னிஸ் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தனர்.

வில்லியம்ஸ் சகோதரிகள்

வில்லியம்ஸ் சகோதரிகள்

வில்லியம்ஸ் சகோதரிகள் இணை இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் 15 முறை தொடர்ச்சியாக வெற்றிபெற்று சாதனை செய்திருந்தனர். செரீனாவும், வீனஸும், 2000, 2008, 2012 ஆகிய ஆண்டுகளில் இரட்டையர் பிரிவில் ஜோடியாக ஆடி தங்கம் வென்றுள்ளனர்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

மகளிர் இரட்டையர் பிரிவில் நடப்புச் சாம்பியன் செரீனா சகோதரிகள்தான். ரியோ ஒலிம்பிக்கில் மகளிர் ஒற்றையர் போட்டியிலும், இரட்டையர் போட்டியிலும் இந்த சகோதரிகள் கலக்குவார்கள் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.

சகோதரிகள் தோல்வி

சகோதரிகள் தோல்வி

இந்த முறையும் பதக்கத்தை தக்க வைப்பார்களா என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் கட்ச் குடியரசு வீராங்கனைகளிடம் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியை தழுவினர். நம்பர் 1 இணை வீராங்கனைகளான வில்லியம்ஸ் சகோதரிகளை வீழ்த்தியதன் மூலம் கட்ச் வீராங்கனைகள் தங்கப் பதக்கத்தை வெல்வார்கள் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸ்

ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸ்

டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்றில் தரவரிசையில் 6வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், தரவரிசையில் 62வது இடத்தில் உள்ள பெல்ஜியத்தின் கிரிஸ்டன் பிலிப்கென்சை எதிர்கொண்டார்.

அதிர்ச்சி தோல்வி

அதிர்ச்சி தோல்வி

முதல் செட்டை 6-4 என்று கைப்பற்றிய வீனஸ், அடுத்து 3-6, 6-7 என இரண்டு செட்களையும் நழுவ விட்டார். முடிவில் வீனஸ் வில்லியம்ஸ் 6-4, 3-6, 6-7 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்தார். இந்த தோல்வி அமெரிக்க டென்னிஸ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் மூலம் ஒற்றையர் பிரிவில் வீனஸ் வில்லியம்ஸ் பதக்கம் வெல்வார் என்ற கனவு தகர்ந்தது.

Story first published: Monday, August 8, 2016, 7:49 [IST]
Other articles published on Aug 8, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+