சின்சினாட்டி மாஸ்டர்ஸ்.. பெடரர் வெற்றியுடன் துவக்கம்... செரீனா 2வது சுற்றோடு வெளியேறினார்
சின்சினாட்டி : அமெரிக்காவில் நடந்து வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் ரோஜர் பெடரர் தன் முதல் போட்டியில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தார்.
ரோஜர் பெடரர் கடைசியாக விம்பிள்டன் தொடரில் காலிறுதியில் கெவின் ஆண்டர்சனிடம் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். அதன் பின் சிறிது ஓய்வில் இருந்த அவர், மீண்டும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் தொடரில் பங்கேற்றார்.

இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் பெடரருக்கு விலக்கு அளிக்கப்பட்டது. தன் முதல் போட்டியாக இரண்டாவது சுற்றில், பீட்டர் கோஜோவ்ஸிக்-ஐ சந்தித்தார். இந்த போட்டியில் 6-4, 6-4 என்ற செட்களில் வெற்றி பெற்றார் ரோஜர் பெடரர். இந்த வெற்றி மூலம் விம்பிள்டன் தோல்வியில் இருந்து மீண்டுள்ளார் பெடரர்.
இதுவரை இந்த தொடரில் ஏழு முறை பட்டம் வென்றுள்ள பெடரர், கடைசி இரண்டு முறை காயங்களால் பங்கேற்கவில்லை. மற்றொரு முன்னணி வீரரான நடால் இந்த தொடரில் பங்கேற்காத நிலையில், பெடரர் இந்த முறை பட்டம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பெண்கள் ஒற்றையர் பிரிவில், செரீனா வில்லியம்ஸ் பெட்ரா கேவிட்டோவா-வை சந்தித்தார். இதில் செரீனா 6-3, 2-6, 6-3 என தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார். சில வாரங்கள் முன்பு, சிலிக்கான் வேலி கிளாசிக் தொடரில் மிக மோசமான தோல்வியை தழுவிய செரீனா, இந்த தொடரின் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். தொடர்ந்து ஆதிக்கம் செலுத்துவார் என எதிர்பார்த்த நிலையில், மீண்டும் தோல்வி அடைந்துள்ளார்.
செரீனா வில்லியம்ஸ், பேறு கால ஓய்வுக்குப் பின் டென்னிஸ் தொடர்களில் பெரிய அளவில் சாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக, இந்த ஆண்டில் விம்பிள்டன் இறுதிப்போட்டி வரை சென்றார்.
Story first published: Thursday, August 16, 2018, 9:24 [IST]
Other articles published on Aug 16, 2018


Click it and Unblock the Notifications