Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சோயிப் மாலிக் என் கணவர்... ராம்சரண் தேஜா என் நண்பர்: சானியா மிர்சா

சியால்கோட்: தனது கணவர் சோயிப் மாலிக்குடன் தனக்கு எந்த கருத்து வேறுபாடும் இல்லை என்று இந்திய டென்னிஸ் நட்சத்திரம் சானியா மிர்சா விளக்கமளித்துள்ளார். ராம்சரண் தேஜா தனது நண்பர் மட்டுமே என்றும் அவர் கூறியுள்ளார். சமூக வலைதள பக்கத்தில் தன்னைப்பற்றி வதந்திகளை பரப்புபவர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்துள்ளார் சானியா மிர்சா.

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை 2010-ம் ஆண்டு சானியா மிர்சா திருமணம் செய்து கொண்டார்.

சோயிப் மாலிக்- சானியா மிர்சா இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவர்கள் விரைவில் பிரிந்துவிடுவார்கள் என்றும் தகவல்கள் உலாவந்தன. மேலும் சானியா தனது கணவரை விவாகரத்து செய்துவிட்டு தெலுங்கு நடிகரும் சிரஞ்சீவியின் மகனுமான ராம்சரண் தேஜாவை திருமணம் செய்யவிருப்பதாவும் ஒருசில தெலுங்கு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள சானியா, பாகிஸ்தானில் உள்ள தனது கணவரின் ஊரான சியால் கோட்டில் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர்,

எனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது என்று வெளியான செய்தி தவறானது. எங்கள் திருமணம் மிகவும் சாதாரணமான நிகழ்வு அல்ல. இருவருமே சர்வதேச விளையாட்டு வீரர்கள். இருவேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள். இருவருக்குமே நெருக்கடிகளும் அதிகம். எனினும் அவற்றை சமாளித்து வருகிறோம்.

சுதந்திரமாக இருக்கிறேன்

சுதந்திரமாக இருக்கிறேன்

இப்போது எனது கணவருடனும், அவரது உறவினர்களுடனும் சிறிது நாட்கள் தங்குவதற்காகவே சியால்கோட் வந்துள்ளேன். ஊடகங்களின் அதிக தொந்தரவு இல்லாமல், இங்குதான் நான் சற்று சுதந்திரமாக இருக்க முடிகிறது.

சந்திக்க முடியவில்லை

சந்திக்க முடியவில்லை

நாங்கள் இருவரும் அடிக்கடி சந்தித்துக் கொள்ள முடிவதில்லை என்பது உண்மைதான். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டபோது எந்த அளவுக்கு அன்புடன் இருந்தோமோ அதே அளவு அன்புடன்தான் இப்போதும் இருக்கிறோம். விளையாட்டையும், திருமண வாழ்க்கையையும் ஒரே நேரத்தில் கையாளுவது என்பது கடினமானது தான். ஆனால் அதனை சமாளிக்கும் திறன் இருவருக்குமே உண்டு.

இது என் கணவரின் வீடு

இது என் கணவரின் வீடு

பாகிஸ்தானில் பாதுகாப்பு குறைபாடுகள் இருக்கும் என்று அனைவரும் கூறுகிறார்கள். ஆனால் இங்கு நான் வரும்போது எந்த பிரச்சினையையும் எதிர்கொள்ளவில்லை. இது எனது கணவர் வீடு என்றார்.

கிரிக்கெட் பார்த்தேன்

கிரிக்கெட் பார்த்தேன்

சமீபத்தில் இருபது ஓவர் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தை எனது கணவரின் குடும்பத்துடன் டி.வி.யில் பார்த்தேன். நாங்கள் அனைவரும் இந்தியாதான் வெல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டோம். ஆனால் அப்படி நடக்கவில்லை. அனைத்து கிரிக்கெட் வீரர்களின் விளையாட்டு வாழ்க்கையிலும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். சோயிப் மாலிக் மீண்டும் தொடர்ந்து சிறப்பாக விளையாட வேண்டுமென்று பிரார்த்தனை செய்கிறேன் என்றார்.

ராம்சரண் என் நண்பர்

ராம்சரண் என் நண்பர்

தனக்கும் தனது கணவர் சோயீப் மாலிக்கிற்கும் எவ்வித பிரச்சனையும் இல்லை என்றும், அதேபோல் ராம்சரண் தனது நெருங்கிய நண்பர் என்பதை தவிர வேறு எந்த உறவும் அவருடன் இல்லை என்று விளக்கமளித்துள்ள சானியா, இதுகுறித்து மேலும் வதந்தியை பரப்புபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பார்ட்டிகளில் பங்கேற்பேன்

பார்ட்டிகளில் பங்கேற்பேன்

ராம்சரண் தேஜா உடன் பார்ட்டிகளில் பங்கேற்கிறேன், அவருடன் ஒரு சினிமாவில் நடிக்கிறேன். ஆனால் அவர் மீது எனக்கு எந்த வித தவறான அபிப்ராயமும் கிடையாது என்றும் சானியா கூறியுள்ளார். மாலிக்கை விவாகரத்து செய்யப்போவதாக வந்துள்ள செய்தி முழுக்க முழுக்க வதந்தி. இந்த வதந்திகளை பரப்புபவர்கள் மீது என் கணவரின் துணையுடன் சட்டப்பட நடவடிக்கை எடுப்பேன் என்றும் சானியா கூறியுள்ளார்.

ராம்சரண் தேஜா

ராம்சரண் தேஜா

நடிகர் ராம் சரண் தேஜா. தெலுங்கு இளம் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்கிறார். ராம் சரணுக்கும், அப்பல்லோ மருத்துவமனை தலைவர் பிரதாப் ரெட்டியின் பேத்தி உபாசனா காமினேனிக்கும் கடந்த 2012ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ராம்சரணுடன் சானியா அதிக அளவில் நட்பு பாராட்டுவதும், அவர் நடிக்கவுள்ள ஒரு படத்தில் சிறப்பு தோற்றத்தில் சானியா மிர்சா நடிக்க ஒப்புக்கொண்டதே இந்த வதந்தி பரவ காரணம் என தெலுங்கு திரையுலகில் பேசப்படுகிறது.

Story first published: Saturday, December 20, 2014, 13:15 [IST]
Other articles published on Dec 20, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+