36 வயதினிலே மம்மி ரிட்டன்ஸ்…. கன்பர்ம் பண்ணிட்டார் செரீனா
நியூயார்க்: சமீபத்தில் திருமணமான, ஒரு குழந்தைக்கு தாயான செரீனா வில்லியம்ஸ், வரும் ஜனவரியில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
டென்னிஸ் உலகின் மகாராணியான செரீனா வில்லியம்ஸ், ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான அலெக்சிஸ் ஓகானியான் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு திருமணம் நிச்சயமானது.

இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியின்போது, தான் கர்ப்பமாக இருப்பதாக செரீனா அறிவித்தார். கர்ப்பிணியான செரீனா வில்லியம்ஸ், பைனலில் தன்னுடைய சகோதரி வீனஸ் வில்லியம்ஸை வென்று, ஆஸ்திரேலிய ஓபன் பட்டதையும் வென்றார்.
36 வயதாகும் செரீனா, சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தைக்கு தாயானார். கடந்த மாதம் ஓகானியான், செரீனா திருமணம் குழந்தையோடு நடந்தது.
இந்தாண்டு ஆஸ்திரேலிய ஓபன் வென்றபோதே, 2018 ஜனவரியில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கண்டிப்பாக களமிறங்குவேன் என்று செரீனா கூறி வந்தார்.
குழந்தை, திருமணம் என குடும்ப வாழ்க்கை களைகட்டினாலும், பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தார். ஆனால், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் விளையாடும் அளவுக்கு அவர் முழுமையாக தயாராகவில்லை என்று அவருடைய கோச் கூறியிருந்தார்.
இந்த நிலையில், ஏற்கனவே 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா, வரும் ஜனவரியில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் களமிறங்குகிறார் என, போட்டிக் குழுவினர் தெரிவித்துள்ளனர். அதற்கான விசாவை செரீனா பெற்றுள்ளார். தாயாகி, திருமணம் செய்துள்ள செரீனா, ஓராண்டுக்குப் பிறகு களமிறங்க உள்ளதால், அவரிடம் பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
Story first published: Friday, December 8, 2017, 20:42 [IST]
Other articles published on Dec 8, 2017


Click it and Unblock the Notifications