என்னது செரீனா விளையாட மாட்டாரா??
நியூயார்க்: சமீபத்தில் திருமணமான, ஒரு குழந்தைக்கு தாயான செரீனா வில்லியம்ஸ், வரும் ஜனவரியில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பங்கேற்பது சந்தேகம் என்று அவருடைய கோச் கூறியுள்ளார்.
டென்னிஸ் உலகின் மகாராணியான செரீனா வில்லியம்ஸ், ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான அலெக்சிஸ் ஓகானியான் காதலித்து வந்தனர். கடந்த ஆண்டு திருமணம் நிச்சயமானது.

இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியின்போது, தான் கர்ப்பமாக இருப்பதாக செரீனா அறிவித்தார். கர்ப்பிணியான செரீனா ஆஸ்திரேலிய ஓபன் பட்டதையும் வென்றார்.
சில மாதங்களுக்கு முன் பெண் குழந்தைக்கு தாயானார், 36 வயதாகும், 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனா. இந்த மாத துவக்கத்தில், ஓகானியான், செரீனா திருமணம் குழந்தையோடு நடந்தது.
இந்தாண்டு ஆஸ்திரேலிய ஓபன் வென்றபோதே, 2018 ஜனவரியில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் கண்டிப்பாக களமிறங்குவேன் என்று செரீனா கூறி வந்தார்.
குழந்தை, திருமணம் என குடும்ப வாழ்க்கை களைகட்டினாலும், பயிற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். ஆனால், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் விளையாடும் அளவுக்கு அவர் முழுமையாக தயாராகவில்லை என்று, கோச் பேட்ரிக் மோரோடோக்லு கூறியுள்ளார். ஆனால், 2018ல் செரீனா நிச்சயம் களமிறங்குவார் என்று கோச் கூறியுள்ளார்
Story first published: Thursday, November 30, 2017, 23:15 [IST]
Other articles published on Nov 30, 2017


Click it and Unblock the Notifications