Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய ஓபனுக்கு ஒத்திகை…. துபாயில் களமிறங்குகிறார் செரீனா

துபாய்: 2018 ஜனவரியில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் மீண்டும் களமிறங்குவதாக கூறியுள்ள செரீனா வில்லியம்ஸ், அதற்கு ஒத்திகை பார்க்கும் வகையில், துபாயில் நடக்கும் முபாடலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்கிறார்.

23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், கடந்தாண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் பட்டம் வென்றார். அந்தப் போட்டியின்போது கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

Serena is back


இந்தாண்டு செப்டம்பரில் பெண் குழந்தைக்கு தாயான பிறகு, கடந்த மாதம் தனது காதலரும், ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவனருமான அலெக்சிஸ் ஓகானியானை திருமணம் செய்தார்.

2018 ஜனவரியில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் களமிறங்குவேன் என்று செரீனா கூறியிருந்தார். அதற்கான பயிற்சிகளில் அவர் ஈடுபட்டு வந்தார்.

இந்த நிலையில், அதற்கு தயாராகும் வகையில், துபாயில் நடக்கும் முபாடலா உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் பங்கேற்கிறார். இந்த போட்டியில் பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் ஜெலீனா ஓஸ்டாபெங்கோவும் பங்கேற்கிறார்.





Story first published: Monday, December 25, 2017, 16:30 [IST]
Other articles published on Dec 25, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+