பிறக்கும் முன்பே பட்டம் வென்றவள் என் மகள்.. சிலாகிக்கும் செரீனா!
மியாமி: பிறப்பதற்கு முன்பே என்னுடைய மகள் பட்டம் வென்றாள் என்று அம்மா செரீனா வில்லியம்ஸ் புளங்காகிதம் அடைந்துள்ளார்.
டென்னிஸ் உலகின் முடிசூடா மகாராணியான செரீனா வில்லியம்ஸ், சமீபத்தில் பெண் குழந்தைக்கு தாயானார். 36 வயதாகும், 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள செரீனாவும், ரெட்டிட் நிறுவனத்தின் இணை நிறுவருமான அலெக்சிஸ் ஓகானியானும் குழந்தைக்கு, அலெக்சிஸ் ஒலிம்பியா ஓகானியான் ஜூனியர் என்று பெயரிட்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜனவரியில் நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் போட்டியின்போது, தான் கர்ப்பமாக இருப்பதாக செரீனா அறிவித்தார். கர்ப்பிணியான செரீனா ஆஸ்திரேலிய ஓபன் பட்டதையும் வென்றார்.
"ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் என்னுடன் சேர்ந்து, பிறப்பதற்கு முன்பே என்னுடைய மகள் பட்டத்தை வென்றுள்ளாள். அவளுடைய இனிஷியல், ஏ.ஓ., என்று வரும். ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை வென்றதால், அவளுக்கு அது இனிஷியலாக வரும்படி, இந்தப் பெயரை வைத்தேன்" என்று அம்மா செரீனா புளங்காகிதம் அடைந்துள்ளார்.
அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் களமிறங்கப் போவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த நிலையில், குழந்தை பிறந்த பிறகும், சிக்கென்ற உடலுடன் உள்ள புதிய படங்களையும் செரீனா வெளியிட்டுள்ளார். களமிறங்குவதற்கு அவர் தயாராகிவிட்டார் என்பதை படத்தை பார்த்தாலே புரியும்.


Click it and Unblock the Notifications