Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அந்தப் பக்கம் போய்ராதீங்க.. ரெண்டு அக்கா, தங்கச்சிங்க "சண்டை" போடப் போறாங்க!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதி ஆட்டத்தில் அக்கா தங்கையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸும், வீனஸ் வில்லியம்ஸும் மோதப் போகின்றனர். இதனால் அமெரிக்க டென்னிஸ் ரசிகர்கள் விறுவிறுப்பாகியுள்ளனர்.

உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், சக நாட்டு வீராங்கனையான மேடிசன் கீஸுடன் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மோதி, 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வீழ்த்தி காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.

மறுபக்கம், அவரது அக்காவான வீனஸ் வில்லியம்ஸ், எஸ்டோனியாவின் அனெட் கொன்டெவிட்டுடன் மோதினார். இதில், 6-2, 6-1 என்ற நேர் செட்களில் அபாரமாக வீழ்த்தி வீனஸ் காலிறுதிக்குத் தகுதி பெற்றார்.

இப்போது அக்காவும், தங்கையும் மீண்டும் ஒரு நேரடி மோதலுக்குத் தயாராகி வருகின்றனர்.

அதிரடி செரீனா

அதிரடி செரீனா

செரீனா தனது போட்டியின்போது படு நேர்த்தியாக ஆடினார். 6 தவறுகளை மட்டுமே செய்தார். அதேசமயம் கீஸ், 19 தவறுகளைச் செய்தார். அவரது அதிரடி ஆட்டத்திற்கு முன்பு கீஸால் தாக்குப் பிடிக்க முடியாமல் போய் விட்டது.

செம ஆட்டம்

செம ஆட்டம்

எனது ஆட்டம் நன்றாக இருந்தது. நேர்த்தியாக இருந்தது. அதற்காகப் பெருமைப்படுகிறேன். நிறைய முன்னேறியுள்ளேன் என்றார் செரீனா.

தங்கையுடன் மோதப் போகும் வீனஸ்

தங்கையுடன் மோதப் போகும் வீனஸ்

மறுபக்கம் வீனஸ் வில்லியம்ஸ், எஸ்டோனிய வீராங்கனையை அதகளம் செய்து காலிறுதிக்கு வந்துள்ளார். கடைசியாக அவர் 2010ல் அரை இறுதிப் போட்டி வரை வந்தார். இந்த முறையும் அரை இறுதிக்கு முன்னேறுவாரா என்பது தெரியவில்லை. காரணம், அவர் அடுத்து சந்திக்கப் போவது அன்புத் தங்கை செரீனாவை என்பதால்.

நாங்க ரெடி

நாங்க ரெடி

இருப்பினும் இந்தப் போட்டியை சீரியஸாக எடுத்துக் கொள்வோம் என்று வீனஸ் கூறியுள்ளார். மோதுவதற்கு நாங்கள் தயார். இங்கு அக்கா, தங்கையெல்லாம் கிடையாது. வீராங்கனைகள்தான். போட்டிக்கு இருவருமே முழுமையாக தயாராகி வருகிறோம் என்றார்.

சாதனையை நோக்கி செரீனா

சாதனையை நோக்கி செரீனா

இந்த ஆண்டில் இதுவரை நடந்து முடிந்துள்ள 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் சாம்பியன் ஆகியுள்ளார் செரீனா. அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்றால் அது அவருக்கு 5வது பட்டமாகும். 1988ல் ஸ்டெபி கிராப் இப்படி ஒரே ஆண்டில் அனைத்து கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் வென்றிருந்தார். அந்த சாதனையை இப்போது செரீனாவால் மேட்ச் செய்ய முடியும்.

வீனஸ் என்ன பண்ணப் போறாரோ?

வீனஸ் என்ன பண்ணப் போறாரோ?

ஆனால் 35 வயதாகும் செரீனாவின் அக்கா வீனஸ் வில்லியம்ஸ், விட்டுக் கொடுக்காமல் சீரியஸாக ஆடினால் செரீனாவின் கனவு தகர்ந்து போகும் வாய்ப்புள்ளது. வீனஸ் இதுவரை 2000, 2001 அமெரிக்க ஓபன் பட்டங்களையும், 5 விம்பிள்டன் பட்டங்களையும் வென்றுள்ளார். கடைசியாக அவர் கிராண்ட்ஸ்லாம் வென்றது 2008ம் ஆண்டுதான்.

Story first published: Monday, September 7, 2015, 11:51 [IST]
Other articles published on Sep 7, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+