Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செரீனா - வீனஸ் வில்லியம்ஸ் சகோதரிகள் அதிர்ச்சித் தோல்வி.. கார்லோஸ் அல்காரஸ் அதிரடி வெற்றி

நியூயார்க்: 2026 அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் நேற்று நடந்த 3வது சுற்று போட்டிகளில் முன்னணி வீரர்கள் வெற்றியை பதிவு செய்த நிலையில், முன்னணி நட்சத்திரங்கள் சிலர் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினர். ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் நடப்பு சாம்பியனான ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், சீனாவின் வூ யிபிங்கை எதிர்கொண்டார்.

ஆரம்பம் முதலே முழு ஆதிக்கம் செலுத்திய அல்காரஸ் 6-3, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் அபார வெற்றி பெற்று 4வது சுற்றுக்கு முன்னேறினார். மணிக்கட்டு காயத்தில் இருந்து மீண்டு வந்த அல்காரஸ் அபாரமான ஆட்டத்தை ஆடி வருகிறார். கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் அவர் தொடர்ந்து பெற்ற 17வது வெற்றி இதுவாகும். அடுத்த சுற்றில் அவர் அமெரிக்காவின் டாமி பாலை எதிர்கொள்கிறார்.

Serena - Venus Williams Sisters and Karolina Muchova Face Exit Carlos Alcaraz Wins at US Open 2026

பெண்கள் இரட்டையர் பிரிவில் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஜோடி சேர்ந்த அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ், வீனஸ் வில்லியம்ஸ் கூட்டணி முதல் சுற்றிலேயே ஏமாற்றம் அளித்தது. சுமார் 3 மணி நேரம் நீடித்த மாரத்தான் ஆட்டத்தில், மாயா ஜாயின்ட், சான் ஹா-சிங் இணையிடம் கடும் போராட்டத்திற்கு பின் வில்லியம்ஸ் சகோதரிகள் வீழ்ந்தனர். இவர்களின் திடீர் வெளியேற்றம் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

பெண்கள் ஒற்றையர் 3வது சுற்றில் உலக தரவரிசையில் 7வது இடத்தில் உள்ளவருமான கரோலினா முச்சோவா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். அவரை அமெரிக்காவின் எம்மா நவரோ 6-3, 7-5 என்ற நேர் செட்களில் வீழ்த்தினார். இதன் மூலம் 2026 அமெரிக்க ஒபன் தொடரில் இருந்து வெளியேறிய முதல் டாப்-10 வீராங்கனை என்ற ஏமாற்றத்தை முச்சோவா சந்தித்தார்.

100 மேட்ச் ஆடிய முகமது ஷமி.. கவுரவம் அளிக்கும் கங்குலி.. துலீப் டிராபி பைனலுக்கு முன் பாராட்டு விழா

100 மேட்ச் ஆடிய முகமது ஷமி.. கவுரவம் அளிக்கும் கங்குலி.. துலீப் டிராபி பைனலுக்கு முன் பாராட்டு விழா

மற்றொரு முக்கிய போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா, கனடாவின் லெய்லா பெர்னாண்டஸை சந்தித்தார். இதில் முதல் செட்டை இழந்த பெகுலா, பின்னர் சுதாரித்து, அபாரமாக ஆடி 1-6, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் போராடி த்ரில் வெற்றி பெற்றார். மற்றொரு முக்கிய ஆட்டத்தில் இத்தாலியின் நட்சத்திர வீராங்கனை ஜாஸ்மின் பயோலினி 3-6, 3-6 என்ற நேர் செட்களில் ருமேனியாவின் சோரானா கிறிஸ்டியாவிடம் வீழ்ந்து வெளியேறினார். அடுத்த சுற்றில் கிறிஸ்டியாவை பெகுலா எதிர்கொள்கிறார்.

இங்கிலாந்தில் ஒழுக்கக்கேடு.. பாகிஸ்தான் அணியில் இருந்து 3 மூத்த வீரர்கள் நீக்கப்பட்ட பின்னணி!

Also Read

இங்கிலாந்தில் ஒழுக்கக்கேடு.. பாகிஸ்தான் அணியில் இருந்து 3 மூத்த வீரர்கள் நீக்கப்பட்ட பின்னணி!
Story first published: Saturday, September 5, 2026, 10:49 [IST]
Other articles published on Sep 5, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+