Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செரீனாவுக்கு இன்று டும் டும் டும்... காதலரைக் கைப்பிடிக்கிறார்.. கைக்குழந்தை சகிதம்!

வாஷிங்டன்: டென்னிஸ் உலகின் முடிசூடா மகாராணி செரீனா வில்லியம்ஸ் - ரெட்டிட் துணை நிறுவனர் அலெக்சிஸ் ஓகானியான் திருமணம் இன்று நடைபெற உள்ளது. மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த செரீனா வில்லியம்ஸ், 1995ல் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் விளையாடத் துவங்கினார். கடந்த, 2002ல் உலகத் தரவரிசையில் முதலிடம் பிடித்தார். 17 ஆண்டுகளில், 8 முறை தரவரிசையில் முதலிடத்தை தக்க வைத்திருந்தார்.

தற்போது, 36 வயதாகும் செரீனா, இதுவரை, 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அதிக பட்டம் வென்றவர்களில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

2016ல் நிச்சயமான திருமணம்

2016ல் நிச்சயமான திருமணம்

ரெட்டிட் நிறுவனத்தின் துணை நிறுவனர் அலெக்சிஸ் ஓகானியானும், செரீனாவும் காதலித்து வந்தனர். 2016 டிசம்பரில் திருமணம் செய்வதாக நிச்சயம் செய்து கொண்டனர்.

திருமணத்திற்கு முன்பே தாய்மை

திருமணத்திற்கு முன்பே தாய்மை

இந்தாண்டு ஜனவரியில், ஆஸ்திரேலிய ஓபன் போட்டியின்போது, தான் கர்ப்பமாக இருப்பதாக செரீனா அறிவித்தார். ஆஸ்திரேலிய ஓபனை வென்ற பிறகு, சர்வதேச போட்டிகளில் விளையாடாமல் இருந்தார் செரீனா. செப்டம்பர், 1ம் தேதி அவருக்கு பெண் குழந்தை பிறந்தது. ஒலிம்பியா என்று பெயர் சூட்டப்பட்டது.

2018 முதல் விளையாட்டு

2018 முதல் விளையாட்டு

2018 ஜனவரியில் நடக்கும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் மீண்டும் களமிறங்கப் போவதாக செரீனா அறிவித்திருந்தார். இந்த நிலையில், செரீனா - அலெக்சிஸ் ஓகியான் திருமணம், நியூ ஓர்லான்சில் நாளை நடக்க உள்ளது.

கைக்குழந்தையுடன் திருமணம்

கைக்குழந்தையுடன் திருமணம்

மிகவும் நெருக்கமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பாடகி பியான்ஸ், நடிகை மேகன் மார்கெல் உள்பட செரீனாவுக்கு நெருக்கமானவர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குழந்தையுடன் திருமணம் செய்வது மிகவும் மகிழ்ச்சியான தருணம் என, செரீனா முன்பு கூறியிருந்தார்.

Story first published: Thursday, November 16, 2017, 10:36 [IST]
Other articles published on Nov 16, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+