பெரிய சாதனையை நோக்கி முன்னேறிய செரீனா.. அமெரிக்க ஓபன் அரையிறுதியில் அசத்தல் வெற்றி!
Recommended Video
நியூயார்க் : மகளிர் டென்னிஸ் நட்சத்திரமான செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி உள்ளார்.
2019 அமெரிக்க ஓபன் மகளிர் ஒற்றையர் அரையிறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், எலினா விட்டோலினாவை சந்தித்தார். இந்த போட்டியில் எந்த சிரமமும் இன்றி, வெற்றி பெற்றார்.

முதல் இரண்டு செட்களையும் 6 - 3, 6 - 1 என்ற கேம் கணக்கில் கைப்பற்றிய செரீனா எளிதாக வெற்றி பெற்றார். இது செரீனாவின் 101வது அமெரிக்க ஓபன் வெற்றி ஆகும். இதன் மூலம், கிறிஸ் ஈவர்ட்டின் அமெரிக்க ஓபன் வெற்றி சாதனையை சமன் செய்து இருக்கிறார்.
விட்டோலினாவை வீழ்த்தி அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளார் செரீனா வில்லியம்ஸ். 37 வயதாகும் அவர் 1998இல் அமெரிக்க ஓபன் தொடரில் தன் முதல் போட்டியில் பங்கேற்றார்.
சுமார் 20 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு அமெரிக்க ஓபன் இறுதிப் போட்டியில் விளையாட உள்ளார். கடந்த ஆண்டு கூட செரீனா அமெரிக்க ஓபன் இறுதியில் ஆடினார். அந்தப் போட்டியில் நடுவருடன் வாக்குவாதம் செய்த செரீனா, உலக அளவில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தினார். அந்தப் போட்டியில் தோல்வியும் அடைந்து இருந்தார்.
இந்த நிலையில், இந்த ஆண்டு அமெரிக்க ஓபன் இறுதியில் பியான்கா ஆண்ட்ரீஸ்கு-வை சந்திக்க உள்ளார் செரீனா. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றால் அது சாதனை வெற்றியாக இருக்கும். 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வார் செரீனா. அதோடு சுமார் 5 ஆண்டுகளாக அமெரிக்க ஓபனில் பட்டம் வெல்லாமல் இருக்கும் குறையையும் போக்குவார்.
ஆண்ட்ரீஸ்குஇதுவரை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றதில்லை. கடந்த ஆண்டு நவோமி ஒசாகா செரீனாவை வீழ்த்தி முதல் முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றது போல, இவரும் சாதிப்பாரா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications