Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

18வது முறையாக.. 11 ஆண்டுகளாக.. செரீனா பிடியில் சிக்கித் திணறும் ஷரபோவா

விம்பிள்டன்: செரீனா வில்லியம்ஸ்.. இந்தப் பெயரைக் கேட்டாலே ஷரபோவாவுக்கு ஈரக்குலையே நடுங்கிப் போய் விடுகிறது. கடந்த 11 வருடமாக இந்த செரீனாவிடம் சிக்கி இவர் படும் பாடு இருக்கே.. அப்பப்பபா.. சொல்லி மாளாதது.

கடந்த 11 வருடமாக செரீனாவை வெல்ல முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கிறார் ஷரபோவா. இருவரும் இதுவரை மோதிய 20 போட்டிகளில் 18 முறை தோல்வியைத் தழுவியுள்ளார்.

நேற்று நடந்த விம்பிள்டன் மகளிர் ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் மீண்டும் ஒரு மோசமான தோல்வியைத் தழுவியுள்ளார் ஷரபோவா. 2-6, 4-6 என்ற நேர் செட்களில் தோற்றுப் போய் விட்டார்.

11 வருடத்திற்கு முன்பு

11 வருடத்திற்கு முன்பு

கடைசியாக செரீனாவை, ஷரபோவாவா வென்று 11 வருடங்களாகி விட்டது. இது ஒரு மிகப் பெரிய ஆச்சரியமான விஷயமாகும். கடந்த 11 வருடமாக ஒருமுறை கூட செரீனாவை, ஷரபோவா வெல்லாமல் போனது வியப்பளிக்கிறது.

14 பட்டங்களைக் குவித்த செரீனா

14 பட்டங்களைக் குவித்த செரீனா

இந்த 11 ஆண்டு காலத்தில் செரீனாவோ இமயத்தின் உச்சியில் போய் உட்கார்ந்து விட்டார். 14 கிராம்ட் ஸ்லாம் பட்டங்களை அவர் இந்தக் காலகட்டத்தில் வென்றுள்ளார்.

20வது ஸ்லாம்

20வது ஸ்லாம்

செரீனா இதுவரை 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். மகளிர் பிரிவில் அதிக கிராண்ஸ்லாம் பட்டங்களை வென்ற பெருமைக்குரியவர் மார்கரெட் கோர்ட்தான். அவர் 24 வைத்துள்ளார். அதை பீட் செய்ய செரீனாவுக்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளன.

தொடர்ந்து 27வது வெற்றி

தொடர்ந்து 27வது வெற்றி

நேற்றைய வெற்றியானது செரீனாவுக்கு தொடர்ச்சியான 27வது வெற்றியும் கூட. அந்த வகையிலும் செரீனா அசத்தி விட்டார், கோர்ட்டைக் கலக்க விட்டார்.

புயல் வேக சர்வீஸ்.. சரமாரி ஏஸ்

புயல் வேக சர்வீஸ்.. சரமாரி ஏஸ்

நேற்றைய போட்டியில் செரீனாவின் சர்வீஸ் வழக்கம் போல புயல் வேகத்தில் இருந்ததைப் பார்தது ரசிகர்களே மிரண்டார்கள். சர்வீஸைச் சமாளிக்க முடியாமல் ஷரபோவாவே சுருண்டு போய் விட்டார். அதேபோல 13 ஏஸ்களை நேற்று செரீனா விளாசினார்.

5 பட்டங்களுடன் ஷரபோவா

5 பட்டங்களுடன் ஷரபோவா

நீண்ட காலமாக ஆடி வந்தாலும் கூட ஷரபோவா இதுவரை 5 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை மட்டுமே வென்றுள்ளார். 3 முறை இறுதிப் போட்டியில் வந்து செரீனாவிடம் வீழ்ந்தவர் அவர்.

Story first published: Friday, July 10, 2015, 11:32 [IST]
Other articles published on Jul 10, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+