அக்காவை மீண்டும் வீழ்த்தினார் செரீனா.. விம்பிள்டனில் ஒரு விறுவிறு மோதல்
விம்பிள்டன்: வி்ல்லியம்ஸ் சகோதரிகளின் வாழ்க்கையில் நேற்று ஒரு முக்கிய நாள். மீண்டும் ஒருமுறை செரீனாவும், அவரது அக்கா வீனஸ் வில்லியம்ஸும் நேற்று விம்பிள்டனில் நடந்த ஒற்றையர் போட்டியில் மோதினர். இதில் செரீனாவே வென்றார்.
அக்காவுக்கு எதிரான தனது வெற்றி விகிதத்தையும் அவர் உயர்த்திக் கொண்டார். இதுவரை இருவரும் 26 முறை மோதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அதிக அளவிலான போட்டிகளில் வென்றவர் செரீனாதான். அதாவது நேற்றைய போட்டியுடன் சேர்த்து 15 போட்டிகளில் வென்றுள்ளார்.
நேற்றைய வெற்றியின் மூலம் காலிறுதிப் போட்டிக்கு செரீனா வில்லியம்ஸ் தகுதி பெற்றார். கடந்த 6 ஆண்டுகளில் இப்போதுதான் முதல் முறையாக செரீனா விம்பிள்டன் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனக்கு 33 உனக்கு 35
செரீனாவுக்கு வயது 33 ஆகிறது. அவரது அக்கா வீனஸுக்கு 35 வயதாகிறது. விளையாட்டு என்று வந்து விட்டால் வீனஸை விட செரீனாதான் பெரியவர். பிரித்து மேய்ந்து விடுவார். அக்கா என்று கூட பார்க்க மாட்டார்.

இரண்டு புயல்கள் போல
செரீனா ஒரு புயல் என்றால், வீனஸ் இன்னொரு புயல். இரு புயல்களும் இணைந்து ஆடினால் எப்படி இருக்குமோ அப்படித்தான் இருக்கும் இவர்கள் மோதும் போட்டிகள் எல்லாமே.

அபார வெற்றி
நேற்று விம்பிள்டன் சென்டர் கோர்ட்டில் நடந்த காலிறுதிக்கு முந்தைய ஆட்டத்தி்ல வீனஸும், செரீனாவும் மோதினர். அதில், 6-4, 6-3 என்ற நேர் செட்களில் செரீனா தனது அக்காவை வீழ்த்தினார்.

இன்னும் எத்தனை மோதலோ
போட்டிக்குப் பின்னர் வீனஸ் பேசுகையில், இன்னும் எத்தனை போட்டிகளில் நாங்கள் மோதப் போகிறோமோ. ஆனால் எத்தனை போட்டியில் மோதினாலும் அந்தப் போட்டிகள் சுவராஸ்யமாக இருக்குமாறு பார்த்துக் கொள்வோம் என்றார்.


Click it and Unblock the Notifications