Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வயதானாலும்... சீற்றம் குறையாத சிங்கமாக வலம் வரும் செரீனா வில்லியம்ஸ்!

விம்பிள்டன், லண்டன்: செரீனா வில்லியம்ஸ்.. டென்னிஸ் உலகின் பெண் சிங்கம். தன்னை எதிர்த்து மோதிய ஒவ்வொருவரையும் துவம்சம் செய்து தொடர்ந்து கம்பீரமாக உலா வரும் செரீனா வில்லியம்ஸ், அத்தனை இளம் தலைமுறை வீராங்கனைகளுக்கும் மிகப் பெரிய ஆதர்ச சக்தியாக உருவெடுத்துள்ளார். தனது 22வது ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள செரீனா, தனது வயதையும் மீறிய வேகத்துடன் காணப்படுவது உண்மையிலேயே ஆச்சரியம்தான்.

விம்பிள்டன் ஒற்றையர் மகளிர் பட்டத்தை நேற்று வென்று அசத்தினார் செரீனா. புயல்கள் பல சூழ்ந்தபோதும் பூ வென ஊதி விட்டு உள்ளே புகுந்து கலைத்துப் போடும் திறமைசாலி செரீனா. இப்போதும் அப்படித்தான் தனது 22வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அட்டகாசமாக வென்றுள்ளார் செரீனா.

34 வயதான செரீனாவும், 36 வயதான அவரது அக்கா வீனஸ் வில்லியம்ஸும் டென்னிஸ் ஆட வந்தது முதல் இரட்டைப் புயல்களாக இன்றும் அசத்திக் கொண்டுள்ளனர். அதில் அக்காவை விட ஒரு படி உயர்ந்து நிற்கிறார் செரீனா. இருவரும் சேர்ந்து பெண்கள் டென்னிஸுக்கு புது வீச்சையும், சக்தியையும், கவர்ச்சியையும் கொண்டு வந்து சேர்த்தனர்.

20 வருடமாக

20 வருடமாக

கிட்டத்தட்ட 20 வருடங்களாக இருவரும் அசத்திக் கொண்டுள்ளனர். இந்த பயணத்தில் இதுவரை 22 (ஒற்றையர்) கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார் செரீனா வில்லியம்ஸ் என்பது பிரமிக்க வைப்பதாகும்.

7வது விம்பிள்டன் ஒற்றையர் பட்டம்

7வது விம்பிள்டன் ஒற்றையர் பட்டம்

செரீனாவைப் பொறுத்தவரை இது ஒட்டுமொத்தமாக அவருக்கு 7வது விம்பிள்டன் ஒற்றையப் பட்டமாகும். இந்தப் பட்டத்தை வென்ற கையோடு புதிய இலக்கு ஒன்றையும் அவர் எட்டினார்.

ஸ்டெபி சாதனை சமன்

ஸ்டெபி சாதனை சமன்

முன்னாள் பெண் சூப்பர் ஸ்டார் ஸ்டெபி கிராப் மொத்தமாக 22 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார். அந்த சாதனையை தற்போது செரீனா சமன் செய்துள்ளார். அதேபோல இன்னொரு சாதனைக்கும் செரீனா தயாராகி வருகிறார்.

கோர்ட் சாதனை விரைவில் முறியடிப்பு

கோர்ட் சாதனை விரைவில் முறியடிப்பு

மார்கரெட் கோர்ட் மொத்தம் 24 ஒற்றையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றதுதான் சாதனையாக இருந்து வருகிறது. அந்த சாதனையை முறியடிக்க செரீனாவுக்கு இன்னும் 2 பட்டங்களே தேவையாகும். அதையும் செரீனா சாதிப்பார் என்றே தோன்றுகிறது.

டென்னிஸின் முகம்மது அலி

டென்னிஸின் முகம்மது அலி

செரீனாவின் சாதனை பயணத்தை அமெரிக்க ஊடகங்கள் வெகுவாகப் பாராட்டி எழுதி வருகின்றன. டென்னிஸ் உலகின் முகம்மது அலியாக செரீனா திகழ்வதாக ஒரு ஊடகம் பாராட்டியுள்ளது.

வரலாறு படைப்பார்

வரலாறு படைப்பார்

30 வயதைத் தொட்டு விட்டாலே பல வீராங்கனைகள் ஓய்வுக்குப் போய்விடுவார்கள். ஆனால் அதையும் தாண்டி தற்போது செரீனா தொடர்ந்து சிங்கம் போல கர்ஜித்துக் கொண்டிருப்பது பலருக்கும் ஆச்சரியமான விஷயம்தான்.

செரீனா தொடர்ந்து வரலாறு படைப்பார்.. !

Story first published: Sunday, July 10, 2016, 10:34 [IST]
Other articles published on Jul 10, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+