Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புதிய மகுடம் சூடிய செரீனா வில்லியம்ஸ்.. அமெரிக்க ஓபனில் 100 வெற்றிகளை எட்டினார்!

Recommended Video

Watch Video : Serena Williams enters semi final and bags 100th win in US Open

நியூயார்க் : அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் 100 வெற்றிகளை பெற்று சாதனை புரிந்தார்.

மேலும், தன் நூறாவது வெற்றி மூலம், 2019 அமெரிக்க ஓபன் தொடரின் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தார்.

Serena Williams enters semi final and bags 100th win in US Open

சீனாவின் வாங் கியாங்-கை கால் இறுதி சுற்றில் சந்தித்தார் செரீனா வில்லியம்ஸ். செரீனாவின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத அவர் 44வது நிமிடத்திலேயே தோல்வி அடைந்தார்.

6 - 1, 6 - 0 என்ற நேர் செட்களில் எளிதான வெற்றியை பெற்றார் செரீனா வில்லியம்ஸ். இந்த வெற்றி மூலம் அரை இறுதியில் செரீனா வில்லியம்ஸ், உக்ரைனின் எலினா விட்லோனாவை சந்திக்கிறார்.

இது வரை மூன்று சீன வீரர் அல்லது வீராங்கனை மட்டுமே அமெரிக்க ஓபன் அரையிறுதிக்குள் நுழைந்துள்ளனர். நான்காவதாக வாங் நுழைய முயற்சி எடுத்தார். எனினும், செரீனா வில்லியம்ஸ் வேகத்தில் நிலை குலைந்து ஆட்டமிழந்தார்.

இந்த முறை அமெரிக்க ஓபன் மகளிர் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றால் அது செரீனாவின் 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் ஆகும்.

தன் குழந்தைப் பேறு ஓய்வுக்குப் பின் வந்த செரீனா நீண்ட நாட்களாக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்லவில்லை. இந்த முறை அந்த குறையை போக்குவாரா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மேலும், 24வது கிராண்ட்ஸ்லாம் வென்றால், மார்கரெட் கோர்ட்டின் நீண்ட கால சாதனையை முறியடிப்பார் செரீனா.

Story first published: Wednesday, September 4, 2019, 10:23 [IST]
Other articles published on Sep 4, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+