For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செரீனாவின் கிராண்ட்ஸ்லாம் கனவு அவ்வளவு தானா? ஆஸி. ஓபன் காலிறுதியில் அதிர்ச்சித் தோல்வி

மெல்போர்ன் : ஆஸ்திரேலிய ஓபன் தொடரின் மகளிர் ஒற்றையர் காலிறுதியில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்து அதிர்ச்சி அளித்தார்.

செரீனா வில்லியம்ஸ் மார்கரட் கோர்ட்-இன் 24 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்ற சாதனையை ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் சமன் செய்வார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

செரீனா தோல்வி

செரீனா தோல்வி

ஆனால், காலிறுதி வரை முன்னேறிய செரீனா, செக் குடியரசின் கரோலினா பிளிஸ்கோவாவிடம் 6-4, 4-6, 7-5 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து அரையிறுதி செல்லும் வாய்ப்பை இழந்தார்.

தவறான ஷாட்கள்

தவறான ஷாட்கள்

மூன்றாவது சுற்றில் 5-1 என ஒரு கட்டத்தில் முன்னிலையில் இருந்த செரீனா, சில மோசமான செர்வ்கள் மற்றும் தவறான ஷாட்கள் மூலம் தன் வெற்றியை தாரை வார்த்தார்.

செரீனா ஏமாற்றம்

செரீனா ஏமாற்றம்

சென்ற ஆண்டு விம்பிள்டன் தொடரில் இறுதிப் போட்டி வரை சென்று தோல்வி அடைந்த செரீனா இந்த முறை எளிதாக பட்டம் வெல்வார் என கருதப்பட்டது. ஆனால், காலிறுதியுடன் தோல்வி அடைந்து ஏமாற்றம் அளித்தார் செரீனா.

குழந்தை பிறப்புக்கு பின்

குழந்தை பிறப்புக்கு பின்

குழந்தை பிறப்புக்கு பின் சிறிது காலம் ஓய்வில் இருந்த செரீனா, சென்ற ஆண்டு முதல் தீவிரமாக டென்னிஸ் ஆடி வருகிறார். இந்த காலத்தில் நான்கு கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் அவர் பட்டம் வெல்ல முடியாமல் போயுள்ளது.

கேள்விக் குறி

கேள்விக் குறி

தற்போது 37 வயதாகும் நிலையில் செரீனா வில்லியம்ஸ் இனி 24வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வெல்வாரா? அதையும் தாண்டி 25 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்று மார்கரட்-இன் உலக சாதனையை முறியடிப்பாரா என்பது கேள்விக் குறியாகி உள்ளது.

Story first published: Wednesday, January 23, 2019, 10:45 [IST]
Other articles published on Jan 23, 2019
English summary
Serena Williams knocked out of Australian Open 2019 after losing to Karolina Pliskova
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+