Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

27 வருட டென்னிஸ் பயணத்திற்கு முடிவு.. தோல்வியுடன் வெளியேறிய செரீனா வில்லியம்ஸ்.. ரசிகர்கள் சோகம்!

அமெரிக்கா: முன்னணி டென்னிஸ் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் உணர்ச்சிப்பொங்க ஓய்வு பெற்றார்.

Recommended Video

Naagin Dance-ன் History! SL vs BAN Teams-ன் அடையாளமாக மாறியது எப்படி?

டென்னிஸ் விளையாட்டு உலகில் மிகப்பெரிய ஜாம்பவானாக கொடிகட்டி பறந்து வருபவர் அமெரிக்காவை சேர்ந்த செரீனா வில்லியம்ஸ்.

40 வயதான செரீனா வில்லியம்ஸ் இதுவரை பல்வேறு முன்னணி வீராங்கனைகளை வீழ்த்தி சாதனைகளை படைத்தவர்.

செரீனாவின் அறிவிப்பு

செரீனாவின் அறிவிப்பு

இவர் கடந்த மாதம் ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். கிராண்ட் ஸ்லாம் அந்தஸ்து உள்ள, அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் தான் எனது கடைசி போட்டியாக இருக்கும். இனி வரும் நாட்களை தனது குடும்பத்திற்காக செலவளிக்க விரும்புவதாக கூறிய அவர்,

கடினமாக இருந்தாலும், தற்போது டென்னிஸை விட்டு விலகி தான் ஆக வேண்டும் என சோகத்துடன் கூறியிருந்தார்.

ஓய்வு பெற்றார்

ஓய்வு பெற்றார்

இந்நிலையில் கூறியபடி இன்று டென்னிஸில் இருந்து ஓய்வு பெற்றார். அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று செரீனா மற்றும் ஆஸ்திரேலிய வீராங்கனை அஜ்லா டோமலஜனோவிக் ஆகியோர் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 7-5, 6-7, 6-1 என்ற செட் கணக்கில் செரீனா வில்லியம்ஸ் தோல்வி அடைந்தார். மேலும் தொடரில் இருந்தும் வெளியேறினார்.

மறுபரிசீலனை செய்வீரா?

மறுபரிசீலனை செய்வீரா?

ஓய்வு பெறும் முடிவை மறுபரிசீலனை செய்வீர்களா என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த செரீனா வில்லியம்ஸ், அது நடக்காது என நினைக்கிறேன், ஆனால் உங்களுக்கு எப்போதும் அது தெரியாது" என கூறியுள்ளார். மேலும் தனது வளர்ச்சிக்கு தனது தங்கை வீனஸ் தான் முக்கிய காரணம் என உணர்ச்சிப்பொங்க கூறிவிட்டு வெளியேறினார்.

சாதனைகள்

சாதனைகள்

கடந்த 27 ஆண்டுகளாக டென்னிஸ் உலகில் உள்ள செரீனா வில்லியம்ஸ் 186 வாரங்கள் தொடர்ச்சியாக நம்பர் 1 வீராங்கனையாக திகழ்ந்துள்ளார். 23 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ள அவர், ஒலிம்பிக் தொடரில் 4 முறை தங்கப்பதக்கத்தை கைப்பற்றியுள்ளார். மேலும் இதுவரை 73 முறை சாம்பியன் பட்டங்களையும் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 3, 2022, 17:05 [IST]
Other articles published on Sep 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+