Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்.. செரீனா வில்லியம்ஸ் 'ஷாக்' தோல்வி!

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸின் வெற்றி பவனி முடிவுக்கு வந்துள்ளது. 4வது சுற்றில் அவர் அனா் இவனோவிக்கிடம் எதிர்பாராத வகையில் தோல்வியைத் தழுவி வெளியேறினார்.

யாருமே இந்தத் தோல்வி்யை எதிர்பார்க்கவில்லை. செரீனாவின் ரசிகர்களுக்கு பெரும் அப்செட்டாக அமைந்துள்ளது அவரது தோல்வி.

முதல் நிலை வீராங்கனையான செரீனா, இந்தப் போட்டியி்ல் வெல்வார் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் கடுமையாக போராட வேண்டிய நிலைக்கு செரீனா்வைத் தள்ளி விட்டார் இவனோவிக். செரீனாவின் ஒவ்வொரு சர்வையும் அட்டகாசமாக மடக்கி அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கினார் இவனோவிக்.

இந்த வெற்றி இவனோவிக்கே கூட எதிர்பார்த்திருக்க முடியாதுதான். காரணம், இவனோவிக் இதற்கு முன்பு விளையாடியதை விட சிறப்பாக இன்று விளையாடினார்.

இதற்கு முன்பு செரீனாவிடம் நான்கு முறை தோல்வியைத் தழுவியவர் இவனோவிக் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் செரீனா்வுக்கு எதிராக ஒரு செட்டைக் கூட அவர் வெ்ன்றதே இல்லை. அப்படிப்பட்ட இவனோவிக்கிடம் செரீனா தோற்றது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.

ஐந்து முறை ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை வென்றவரான செரீனாவால் இந்தத் தோல்வியை ஜூரணிக்க முடியவில்லை.

Story first published: Sunday, January 19, 2014, 13:02 [IST]
Other articles published on Jan 19, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+