For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

செரீனாவை தோற்கடித்த அஸரெங்கா... இறுதிப்போட்டியில் நவோமி ஒசாகாவுடன் மோதல்

நியூயார்க் : யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதிப்போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் பெலாரசை சேர்ந்த விக்டோரியா அஸரெங்காவிடம் தோல்வியுற்றுள்ளார்.

இதன்மூலம் மார்கரெட் கோர்ட்டின் 24வது தனிநபர் கிராண்ட் ஸ்லாம் சாதனையை முறியடிக்கும் செரீனா வில்லியம்சின் கனவு தற்போது தகர்ந்துள்ளது.

இதனிடையே, செரீனாவை அரையிறுதியில் வெற்றி கொண்டுள்ள விக்டோரியா அஸரெங்கா, நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நவோமி ஒசாகாவை எதிர்கொள்கிறார்.

அரையிறுதியில் தோற்ற செரீனா

அரையிறுதியில் தோற்ற செரீனா

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நியூயார்க்கில் துவங்கி நடைபெற்று வருகின்றன. ரசிகர்கள் இல்லாத காலி மைதானங்களில் நடைபெற்றாலும் கடந்த சில தினங்களாக ரசிகர்களின் உற்சாகத்திற்கு காரணமாக இந்த போட்டிகள் காணப்படுகின்றன. இந்த போட்டியில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடி வந்த அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் நேற்று நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் தோற்றுள்ளார்.

அஸரெங்காவிடம் செரீனா தோல்வி

அஸரெங்காவிடம் செரீனா தோல்வி

நியூயார்க்கின் ஆர்தர் அஷே மைதானத்தில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான போட்டியில் பெலாரசை சேர்ந்த விக்டோரியா அஸரெங்காவை எதிர்கொண்டு செரீனா வில்லியம்ஸ் ஆடிய நிலையில், 1க்கு 6, 6க்கு 3 மற்றும் 6க்கு 3 என்ற செட் கணக்குகளில் அவர் தோல்வியை தழுவியுள்ளார். அஸரெங்கா இரண்டுமுறை கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2012ல் செரீனாவிடம் தோல்வி

2012ல் செரீனாவிடம் தோல்வி

இதனிடையே செரீனா வில்லியம்ஸ் போன்ற சாம்பியனுடன் அரையிறுதியில் மோதி வெற்றி கொண்டது சிறப்பான தருணம் என்று அஸரெங்கா கூறியுள்ளார். முன்னதாக கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் செரீனாவை அஸரெங்கா வெற்றி கொண்டதில்லை. கடந்த 2012ல் நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனாவிடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.

நவோமி ஒசாகாவுடன் மோதல்

நவோமி ஒசாகாவுடன் மோதல்

கடந்த 2013ல் ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட் ஸ்லாம் டைட்டிலே அவர் வென்ற கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியாகும். கடந்த 2016ல் ஒரு குழந்தைக்கு தாயான அஸரெங்கா அதையடுத்து சிறப்பான விளையாட்டை மேற்கொள்ள தவறினார். இதனிடையே தற்போது அரையிறுதியில் வெற்றி கொண்டு இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ள அவர், நாளை நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நவோமி ஒசாகாவை எதிர்கொள்கிறார்.

Story first published: Friday, September 11, 2020, 17:09 [IST]
Other articles published on Sep 11, 2020
English summary
I'm so grateful to be able to play such a champion in the semi-finals -Azarenka
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+