For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அட யாருப்பா இது.. 3 வயசு தான்.. அதுக்குள்ள சிக்ஸ் பேக்.. அம்மா மாதிரியே போஸ்.. கலக்கும் ஒலிம்பியா!

நியூயார்க் : செரீனா வில்லியம்ஸ் தன் மகளுடன் டென்னிஸ் பயிற்சி செய்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது.

கடந்த 2017இல் ஒலிம்பியா பிறந்தார். அவருக்காக செரீனா வில்லியம்ஸ் ஓராண்டு டென்னிஸ் களத்தை விட்டு விலகி இருந்தார்.

கடந்த ஆண்டு முதல் மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் தீவிரமாக பங்கேற்று வருகிறார் செரீனா வில்லியம்ஸ்.

அமெரிக்க ஓபன்

அமெரிக்க ஓபன்

அடுத்த சில மாதங்களில் அமெரிக்க ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடைபெற உள்ளது. அதற்கான பயிற்சியில் செரீனா வில்லியம்ஸ் ஈடுபட்டுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக எந்த பெரிய டென்னிஸ் தொடரும் நடைபெறவில்லை.

செரீனா வில்லியம்ஸ்

செரீனா வில்லியம்ஸ்

நீண்ட காலம் கழித்து முக்கிய டென்னிஸ் தொடர் நடைபெற உள்ளதால் செரீனா வில்லியம்ஸ் அந்த தொடரில் பங்கேற்பதாக உறுதி அளித்துள்ளார். அதற்கான பயிற்சியில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அவருடன், அவரது மகளும் பயிற்சியில் பங்கேற்றார்.

மகளுடன் செரீனா

மகளுடன் செரீனா

செரீனா வில்லியம்ஸ் தன் மூன்று வயது மகள் ஒலிம்பியாவை அதிகம் வெளி உலகுக்கு காட்டாத நிலையில், தற்போது இருவரும் சேர்ந்து டென்னிஸ் ஆடும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. இதை டென்னிஸ் ரசிகர்கள் ரசித்து, அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

சிக்ஸ் பேக்

சிக்ஸ் பேக்

செரீனா வில்லியம்ஸும், ஒலிம்பியாவும் ஒரே மாதிரி கருநீல உடை அணிந்து இருந்தனர். அந்த புகைப்படம் ஒன்றில் ஒலிம்பியாவின் உடலில் சிக்ஸ் பேக் தெரிவதாக ரசிகர்கள் குறிப்பிட்டு தங்கள் வியப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

புதிய பார்ட்னர்

புதிய பார்ட்னர்

செரீனா வில்லியம்ஸ் அவரது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் உடன் சேர்ந்து மகளிர் இரட்டையர் போட்டிகளில் பங்கேற்பார். தற்போது ஒலிம்பியாவும், அவரும் இரட்டையர்களாக பயிற்சி செய்ததை கண்டு, பல ரசிகர்கள் இனி ஒலிம்பியாதான், செரீனாவின் புதிய பார்ட்னர் என கூறி வருகின்றனர்.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

பயிற்சி முடிந்த உடன் குட்டி ஒலிம்பியா மிக அழகாக தன் தாயுடன் "ஹை ஃபைவ்" செய்து விட்டு, டென்னிஸ் ராக்கெட்டை கீழேயே போட்டு விட்டு சென்று விட்டார். பின் செரீனா அதை எடுத்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் வெளியேறினார்.

Story first published: Saturday, July 4, 2020, 13:12 [IST]
Other articles published on Jul 4, 2020
English summary
Serena Williams practicing with her daughter Olympia. The pictures are shared in social media and going viral.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+