Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எனக்கு எல்லாமே அவர்தான்.. அவர் இல்லாம நான் இல்லவே இல்லை.. உருகும் செரீனா

நியூயார்க்: டென்னிஸ் விளையாட்டில் ஒரு அதி வேக சூறாவளி யார் என்றால் அது செரீனா வில்லியம்ஸ்தான். அதிரடி வீராங்கனையாக உள்ளே நுழைந்த இவர் எத்தனையோ பெண்களுக்கு இன்ஸ்பிரேஷனாக இருப்பவர்.

ஆனால் செரீனாவுக்கே ஒருவர் இன்ஸ்பிரேஷனாக இருக்கிறார் என்றால் அது அவரது அம்மா ஓரசின் வில்லியம்ஸ்தானாம். அவர் இல்லாமல் நான் இல்லை, எனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸ் இல்லை என்று பெருமை பொங்கக் கூறியுள்ளார் செரீனா வில்லியம்ஸ்.

தனது தாயாரைப் பற்றி பெருமையுடன் பேசி சமீபத்தில் ஒரு வீடியோவையும் அவர் தனது இன்ஸ்டாகிராமில் போட்டிருந்தார். அது ஒவ்வொரு சாதனையாளருக்கும் நிச்சயம் உத்வேகம் அளிக்கக் கூடியதாக இருக்கும்.

23 சாம்பியன் பட்டங்கள்

23 சாம்பியன் பட்டங்கள்

23 முறை கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மிகப் பெரிய சாதனையாளர் செரீனா வில்லியம்ஸ். இவருக்கு திருமணமாகி 2 வயதில் ஒலிம்பியா என்ற மகள் உள்ளார். தனது மகளையே தனது சொர்க்கமாக நினைப்பவர் செரீனா வில்லியம்ஸ். என்னதான் புகழ் வந்தாலும், பெயர் கிடைத்தாலும் தாய் என்ற உணர்வுதான் மிகப் பெரியது. தாய்மை என்ற பாக்கியம் கிடைப்பதுதான் மிகப் பெரிய சாதனை என்று சொல்கிறார் செரீனா வில்லியம்ஸ்.

அம்மாதான் எல்லாமே

அம்மாதான் எல்லாமே

தனது தாயார் குறித்துக் கூறுகையில், அவர் ஒரு லெஜண்டு. அவர் இல்லாமல் நான் இல்லை. எனது குடும்பம் இல்லை. நாங்க யாருமே இல்லை. நிறைய லெஜண்டுகள் இருக்கலாம். இல்லை என்று சொல்லவில்லை. ஆனால் எனக்கு எனது அம்மாதான் எல்லாமே.. ஆரம்பத்திலிருந்தே அவர்தான் என்னை மெருகேற்றி உயர வைத்தார். அதை மறக்கவே முடியாது என்றும் செரீனா கூறியுள்ளார்.

நீங்களும் சொல்லுங்க

நீங்களும் சொல்லுங்க

நீங்கள் யாரை வேண்டுமானாலும் கொண்டாடலாம். ஆனால் என் அம்மாவுக்கு நிகராக நான் யாரையும் கருத முடியாது. அவர்தான் என்னைப் பொருத்தவரை கொண்டாடப்பட வேண்டியவர். அதில் நான் பெருமை கொள்கிறேன். நீங்களும் கூட யாராவது லெஜண்டை கொண்டாடிக் கொண்டிருப்பீர்கள். அதை என்னுடன் ஷேர் செய்யுங்கள் என்று கூறியுள்ளார் செரீனா. பலரும் அதற்கு நல்ல வரேற்பு அளித்துள்ளனர்.

அருமையான தாய்தான்

அருமையான தாய்தான்

உண்மையில் செரீனாவின் தாயாரை வெகுவாக பாராட்ட வேண்டும். தனது இரு மகள்களையும் டென்னிஸ் உலகில் முத்திரை பதிக்க வைத்தவர் அவர்தான். குறிப்பாக செரீனா வில்லியம்ஸ். டென்னிஸ் உலகில் பல சாதனைகளைப் படைத்த இரும்பு வீராங்கனைதான் செரீனா வில்லியம்ஸ். குறிப்பிட்ட சிலரே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்த ஆட்டத்தில் தனது முத்திரையை அழுத்தமாக பதித்தவர் செரீனா வில்லியம்ஸ். அந்த வகையில் அவரை உருவாக்கிய அவரது தாயாரை நிறைய பாராட்டலாம்.

Story first published: Sunday, April 12, 2020, 10:12 [IST]
Other articles published on Apr 12, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+