For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சின்சினாட்டி மாஸ்டர்ஸ் முதல் சுற்றில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி

By Aravinthan R

சின்சினாட்டி : அமெரிக்காவின் சின்சினாட்டி நகரில் நடந்து வரும் சின்சினாட்டி மாஸ்டர்ஸ் தொடரில் முன்னணி டென்னிஸ் வீரர்கள் பங்கேற்று ஆடி வருகிறார்கள்.

தற்போது முதல் சுற்றுப் போட்டிகள் நடந்து வருகிறது. அதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். ஆண்கள் பிரிவில் முன்னணி ஆண்டி முர்ரே தோல்வி அடைந்துள்ளார்.

serena won first round while andy murray lost at cincinatti masters

இதற்கு முன் சிலிகான் வேலி கிளாசிக் தொடரின் முதல் சுற்றில் பெற்ற வாழ்நாளின் மோசமான தோல்வியில் இருந்து, இந்த வெற்றி மூலம் மீண்டு இருக்கிறார் செரீனா வில்லியம்ஸ். ஆஸ்திரேலியாவின் காவ்ரிலோவாவை முதல் சுற்றில் சந்தித்த செரீனா 6-1, 6-2 என்ற செட்களில் தோற்கடித்தார்.

மற்றொரு புறம் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஆண்டி முர்ரே முதல் சுற்றில் தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார். அவர் லூகாஸ்-க்கு எதிரான ஆட்டத்தில் 6-1, 1-6, 6-4 என்ற செட்களில் தோல்வி அடைந்தார்.

ஆண்டி முர்ரே வாஷிங்க்டனில் நடைபெற்ற மூன்றாவது சுற்றுப் போட்டிக்கு பின் உடல் சோர்வுற்றதால், அந்த தொடரில் இருந்து விலகினார். அதையடுத்து, பங்கேற்ற இந்த தொடரில் முதல் சுற்றிலேயே வெளியேறி இருக்கிறார்.

மற்ற முன்னணி வீரர்களான, வாவ்ரின்கா, ஜோகோவிக் ஆகியோர் முதல் சுற்றில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். இந்த தொடரில் ரோஜர் பெடரர் பங்கேற்க உள்ளார். இந்த தொடருக்காக ரோஜர்ஸ் கோப்பை டென்னிஸ் தொடரில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.






Story first published: Tuesday, August 14, 2018, 18:09 [IST]
Other articles published on Aug 14, 2018
English summary
Serena Won first round, while Andy Murray lost at Cincinatti Masters.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+