டெல் பெட்ரோ சாம்பியன்-பெடரர் அதிர்ச்சி தோல்வி
நியூயார்க்: யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடரின் பைனலில் அர்ஜென்டினாவின் டெல் பெட்ரோ, சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரரை வீழ்த்தி கோப்பை வென்றார்.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் டென்னிஸ் தொடர் நடந்தது. நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பைனலில் ஐந்து முறை யுஎஸ் ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற பெடரர், 21 வயதான இளம் டெல் பெட்ரோவை சந்தித்தார்.
இதில் சூப்பர் ஆட்டத்தை வெளிப்படுத்திய பெடரர் முதல் செட்டை 6-3 என வென்றார். ஆனால், அடுத்த செட்டை 7-6 என கைப்பற்றி டெல் பெட்ரொ, பெடரருக்கு அதிர்ச்சி கொடுத்தார்.
அடுத்து நடந்த மூன்றாவது செட்டை பெடரரும், நான்காவது செட்டை டெல் பெட்ரோவும் கைப்பற்ற, போட்டி களைகட்டியது. இதையடுத்து கோப்பை யாருக்கு என்பதை நி்ர்ணயிக்கும் ஐந்தாவது செட் படு டென்ஷனாக அமைந்தது.
இதில் பெடரர் செய்த தவறுகளை நன்றாக பயன்படுத்தி கொண்டை டெல் பெட்ரோ 6-2 என் வென்றார்.
சுமார் 4 மணி நேரம் 6 நிமிடங்கள் நடந்து இந்த போட்டியின் இறுதியில் பெட்ரோ 3-6, 7-6, 4-6, 7-6, 6-2 என வென்று தனது முதல் கிராண்ட்ஸ்லாம் கோப்பை வென்றார்.
யுஎஸ் ஓபனில் தொடர்ந்து 6 கோப்பை வெல்ல வேண்டும் என்ற பெடரரின் கனவு கைகூடாமல் போனது.


Click it and Unblock the Notifications