Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செரீனா ரொம்ப 'டஃப்'புப்பா... 'பால் பாயை'க் கட்டிப்பிடித்து சொன்ன இத்தாலி வீராங்கனை!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் செரீனா வில்லியம்ஸுடன் மோதி தோல்வியடைந்த இத்தாலி வீராங்கனை பிரான்செஸ்கா ஷிவியோன், பந்து எடுத்துக் கொடுக்கும் இளைஞரைக் கட்டிப் பிடித்து செரீனா ரொம்பக் கடுமையாக ஆடினார் என்று சிரித்தபடி சொன்னார்.

போட்டியைப் பார்க்க வந்தவர்கள் பிரான்செஸ்காவின் செயலைப் பார்த்து சிரித்தனர்.

பிரான்செஸ்காவும் பின்னர் சிரித்தபடி இது ஜாலியான ஒரு நிகழ்ச்சிதான் என்று விளக்கினார்.

சூடுபிடிக்கும் அமெரிக்க ஓபன்

சூடுபிடிக்கும் அமெரிக்க ஓபன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது.

புயலாக மாறிய செரீனா

புயலாக மாறிய செரீனா

செரீனா வில்லியம்ஸுக்கும், பிரான்செஸ்காகவுக்கும் இடையிலான போட்டியில் அனல் பறந்தது. செரீனா புயல் போல மாறி இத்தாலி வீராங்கனையை புரட்டி எடுத்து விட்டார்.

நேர் செட்களில் வீழ்ச்சி

நேர் செட்களில் வீழ்ச்சி

அபாரமாக ஆடிய செரீனா 6-0, 6-1 என்ற நேர் செட்களில் அதிரடியாக பிரான்செஸ்காவை வீழ்த்தினார்.

பால்பாயைக் கட்டிப்பிடித்து ஆறுதல்

பால்பாயைக் கட்டிப்பிடித்து ஆறுதல்

செரீனாவின் அதிரடி வேகத்தை சமாளிக்க முடியாமல் சுருண்டு போன பிரான்செஸ்கா, அங்கிருந்த பந்து எடுத்துக் கொடுக்கும் இளைஞரை அணுகி அவரைக் கட்டிப்பிடித்துக் கொண்டார். இது அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.

எதுக்கு... ??

எதுக்கு... ??

பின்னர் அந்த நபரிடமிருந்து மீண்டு வந்த பிரான்செஸ்கா பின்னர் கூறுகையில், அந்த நேரத்தில் அப்படிச் செய்ய வேண்டும் என்று தோன்றியது செய்தேன். அந்த பால் பாயிடம், செரீனா மிகவும் கடுமையாக ஆடினார், ரொம்பக் கஷ்டம் என்று சொன்னேன். அது ஒரு ஜோக்.. சீரியஸாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை என்றார்.

அம்புட்டுத்தானா....!

Story first published: Thursday, August 29, 2013, 15:35 [IST]
Other articles published on Aug 29, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+