டேபிள் டென்னி்ஸ்-ஷரத் கமல் தோல்வி

நேற்று நடைபெற்ற முதல் சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் ஆல்பிரடோ கார்னராஸை வென்று 2வது சுற்றுக்கு முன்னேறினார்.
ஆனால், இன்று நடந்த 2வது சுற்று ஆட்டத்தில் அவர் ஆஸ்திரிய வீரர் சென் வீசிங்குடன் மோதினார்.
ஆனால், 5-11, 12-14, 2-11, 11-8, 10-12 என்ற செட் கணக்கில் கமலை ஆஸ்திரிய வீரர் வீழ்த்தினார். ஆஸ்திரிய வீரரை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிய கமலால் ஒரு செட்டை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.
காமன்வெல்த் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற ஷரத் கமல், ஒலிம்பிக்கிலும் பதக்கம் வெல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்தத் தோல்வியை அடைந்து போட்டியிலிருந்து வெளியேறிவிட்டார்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications