For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விம்பிள்டன்-சபினா, செரினா அரையிறுதிக்கு தகுதி

By Staff
Safina
லண்டன்: விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரின் பெண்கள் அரையிறுதிக்கு ரஷ்யாவின் டினரா சபினா, அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் தகுதி பெற்றனர்.

ஆண்டின் மூன்றாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான விம்பிள்டன் லண்டனில் நடந்து வருகிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் காலிறுதி போட்டியில் ரஷ்யாவின் டினரா சபினா, 6-7, 6-4, 6-1 என்ற நேர் செட்களில் ஜெர்மனயின் சபின் லிஸ்கியை வென்றார்.

மற்ற காலிறுதி போட்டிகளில் அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ் 6-2, 6-3 என பெலாரசின் விக்டோரியா அசரங்காவையும், அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 6-1, 6-2 என போலந்தின் அக்னிஸ்கா ராட்வன்ஸ்காவையும், ரஷ்யாவின் எலினா டெமன்டிவா 6-2, 6-2 என இத்தாலியின் பிரான்சஸ்கா சியாவோனையும் வென்று, அரையிறுதிக்கு முன்னேறினர்.

பூபதி-சானியாவை வென்ற பயஸ் ஜோடி...

நேற்று முன்தினம் நடந்த கலப்பு இரட்டையர் போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ், ஜிம்பாப்வேவின் காரா பிளாக் ஜோடி 6-2, 6-7, 6-3 என இந்தியாவின் மகேஷ் பூபதி, சானியா ஜோடியை வென்றது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:27 [IST]
Other articles published on Dec 7, 2011
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+