புளோரிடா டென்னிஸ்-சானியா ஜோடி சாம்பியன்

அமெரிக்காவின் புளோரிடா நகரில் எம்பிஎஸ் குரூப் சாம்பயின்ஸ்ஷிப் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதில் பெண்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சானியா மிர்சா முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வியடைந்து வெளியேறினார்.
இருந்தபோதிலும் அடுத்து நடந்த பெண்கள் இரட்டையரில் நம்பிக்கை தளராமல் சிறப்பாக விளையாடிய சானியா இறுதிபோட்டிக்கு தகுதிபெற்றார். நேற்று நடந்த இறுதி போட்டியில் சானியா, சீன தைபேவை சேர்ந்த சியா ஜங் சுவாங் ஜோடி, அமெரிக்காவின் லிசா ரெமன்ட், செக் குடியரசின் கெவட்டா பெஸ்சகே ஜோடியை எதிர்கொண்டது.
இதில் முதல் செட்டை சானியா ஜோடியும், அடுத்த செட்டை எதிர் ஜோடியும் கைப்பற்றின. இதையடுத்து வெற்றியாளரை உறுதி செய்யும் மூன்றாவது செட்டில் இரு ஜோடிகளும் கடுமையாக மோதி கொண்டன. கடும் போராட்டத்துக்கு பின் சானியா ஜோடி 10-7 என மூன்றாவது செட்டை கைப்பற்றியது.
இறுதியில் சானியா ஜோடி 6-3, 4-6, 10-7 என்ற செட்களில் வென்றது.
தரவரிசையில் முன்னேற்றம்...
இந்நிலையில் இன்று அறிவிக்கப்பட்டுள்ள பெண்களுக்கான சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் சானியா மிர்சா இரட்டையர் பிரிவில் 9 இடங்கள் முன்னேற்றம் கண்டு 59வது இடத்தை பிடித்துள்ளார். ஒற்றையர் தரவரிச அவர் தொடர்ந்து 100வது இடத்தில் இருக்கிறார்.
Story first published: Wednesday, December 7, 2011, 18:25 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications