Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

50லிருந்து 60-க்கு நழுவினார் சானியா!

Sania Mirza
உலக தரவரிசைப் பட்டியலில் இதுவரை 50 -வது இடத்திலிருந்து வந்த சானியா இப்போது வேகமாக நழுவி 6-வது இடத்துக்குப் போய்விட்டார்.

பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிகள் துவங்க இன்னும் நான்கு தினங்களே உள்ள நிலையில், இது சானியாவுக்கு ஏற்பட்ட மிகப் பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது

இந்தியாவின் முன்னணி டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்ஸா, சமீபத்தில் நடந்த நார்டியா நார்டிக் லைட் ஓபன் போட்டியில் மிக மோசமான தோல்வியைத் தழுவியதைத் தொடர்ந்து அவருக்கு இந்தப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

இதற்கு முன் 2006-ம் ஆண்டு தொடர் தோல்விகளால் 66 ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார் சானியா.

ஆனால் கடுமையாகப் போராடி முதல் 50 இடங்களுக்குள் வந்தார் அவர். தொடர் காயங்கள் மற்றும் தோல்விகள் காரணமாக தற்போது அவுட் ஆஃப் பார்மில் உள்ள சானியா, மகளிர் இரட்டையர் பிரிவில் 26-வது இடத்தில் உள்ளார்.

இந்திய டென்னிஸில் ஆண்கள் பிரிவில் லியாண்டர் பயஸும் மகேஷ் பூபதியும் தலா 9வது மற்றும் 15வது இடத்தில் உள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:16 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+