சானியாவுக்கு பலத்த சரிவு-91வது ரேங்க்

சமீபத்தில் நடந்த பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டியில் மணிக்கட்டு வலியால் முதல் சுற்று ஆட்டத்திலேயே விலகிக் கொண்டு பெரும் ஏமாற்றத்ைத அளித்தார் சானியா.
இந்த சரிவு இப்போது தரவரிசைப் பட்டியலில் அவருக்கு பெரும் சரிவை ஏற்படுத்தி விட்டது. மகளிர் டென்னிஸ் சங்கம் வெளியிட்ட தர வரிசைப் பட்டியலில் 21 இடங்கள் இறங்கி 91வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார் சானியா.
கடந்த வாரம் அவர் 70வது ரேங்க்கில் இருந்தார். தற்போது 91வது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
ரேங்கிக்கில் செரீனா வில்லியம்ஸ் முதலிடத்திற்கு வந்துள்ளார். செர்பியாவின் ஜெலீனா ஜாங்கோவிக் 2வது இடத்திலும், செர்பிய வீராங்கனை அனா இவனோவிக் 3வது இடத்திலும் உள்ளனர்.
Story first published: Wednesday, December 7, 2011, 17:15 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications