யு.எஸ்.ஓபன் சாம்பியன் ஆனார் செரீனா வில்லியம்ஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின், மகளிர் இறுதிப் போட்டியில் செரீனாவும், செர்பிய வீராங்கனை ஜெலீனா ஜாங்கோவிக்கும் மோதினர்.
விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில், 6-4, 7-5 என்ற நேர் செட்களில் செரீனா அபார வெற்றி பெற்று சாம்பியன் ஆனார். செரீனா ஒற்றையர் அமெரிக்க ஓபன் பட்டத்தை வெல்வது இது 3வது முறையாகும்.
இந்த வெற்றியுடன், தர வரிசையில் முதலிடத்திற்கும் முன்னேறினார் செரீனா. இதுவரை இந்த இடத்தில் ஜாங்கோவிக் இருந்து வந்தார். தற்போது அவரை 2வது இடத்திற்குத் தள்ளியுள்ளார் செரீனா.
இப்போட்டியின் காலிறுதிப் போட்டியில், தனது சகோதரி வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தியிருந்தார் செரீனா என்பது குறிப்பிடத்தக்கது.
Story first published: Wednesday, December 7, 2011, 17:15 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications