யுஎஸ் ஓபன்-சானியா ஜோடி, வீனஸ் ஏமாற்றம்

ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் தொடரான யுஎஸ் ஓபன் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றுப் போட்டியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ், பெல்ஜியத்தின் கிம் கிளைஸ்டர்ஸை எதிர்கொண்டார்.
இதில் முதல் செட்டில் முழு ஆதிக்கம் செலுத்திய கிளைஸ்டர்ஸ் 6-0 என வென்றார். இதையடுத்து சுதாரித்து கொண்ட வீனஸ் அடுத்த செட்டை 6-0 என வென்று பதிலடி கொடுத்தார்.
இருவரும் தலா ஒரு செட்டில் வெற்றி பெற, மூன்றாவது செட் பரபரப்பாக அமைந்தது. இதை கிளிஸ்டர்ஸ் 6-4 என கைப்பற்றினார். இறுதியில் வீனஸ் 0-6, 6-0, 4-6 என்ற செட்களில் தோல்வியடைந்தார்.
காலிறுதியில் செரினா...
மற்றொரு நான்காவது சுற்றுப்போட்டியில் செரினா வில்லியம்ஸ் 6-2, 6-0 என சுலோவேக்கியாவின் டேனியலா ஹன்டுசோவாவை வென்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
சானியா ஜோடி தோல்வி...
நேற்று நடந்த கலப்பு இரட்டையர் இரண்டாவது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, கனடாவின் டேனியல் நெஸ்டர் ஜோடி 1-6, 4-6 என்ற செட்களில் அமெரிக்காவின் கார்லி குல்லிக்சன், டிராவிஸ் பேரோட் ஜோடியிடம் தோல்வியடைந்தது.
Story first published: Wednesday, December 7, 2011, 18:30 [IST]
Other articles published on Dec 7, 2011


Click it and Unblock the Notifications