Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சிவப்பு டிரஸ்ஸில் நியூயார்க்கை பரபரக்க வைத்த செரீனா வில்லியம்ஸ்!

Serena Williams
நியூயார்க்: செரீனா சாதா டிரஸ்ஸில் வந்தாலே சொக்கிப் போவார்கள் பார்ப்பவர்கள். இந்த நிலையில் அசரடிக்கும் சிவப்பு நிற டிரஸ்ஸில் நியூயார்க் நகரை கலக்கி விட்டார் கருப்பழகி செரீனா.

அழகான டென்னிஸ் வீராங்கனைகள் மத்தியில் அதிரடிஅழகுக்குச் சொந்தக்காரி செரீனாதான். இவர் போடும் டிரஸ்ஸை வேடிக்கை பார்க்கவே தனியாக ஒரு கூட்டம் உண்டு. அப்படி ஒரு அசகாய கவர்ச்சியான உடையில்தான் செரீனா வருவார், விளையாடுவார். அவர் ஆடுவதை விட அவரது கவர்ச்சியைப் பார்க்கத்தான் கூட்டம் கூடும்.

இந்த நிலையில் தற்போது அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடுவதற்காக நியூயார்க வந்துள்ளார் செரீனா. இதற்காக நியூயார்க் வந்த அவர் சிவப்பு நிற டிரஸ்ஸில் அட்டகாசமாகவும், கம்பீரமாகவும் காணப்பட்டார். அதை விட அவரது காலை அலங்கரித்த செருப்புதான் அனைவரையும் ஈர்த்தது. 4000 டாலர் விலையிலான பளிங்குக் கற்களால் அலங்கரிக்கப்பட்டிருந்த ஹீல்ஸ் செருப்பில் படு ஒய்யாரமாக வலம் வந்தார் செரீனா.

உலகின் முதல் நிலை வீராங்கனையான செரீனா போட்டிருந்த உடையை அத்தனை பேரும் வைத்த கண் வாங்காமல் பார்த்து மகிழ்ந்தனர். எட் சல்லிவன் தியேட்டருக்கு வந்தபோதுதான் இப்படி கலக்கலான உடை அணிந்திருந்தார் செரீனா.

அங்கு கூடியிருந்தவர்களிடையே செரீனா ஜாலியாக சிரித்துப் பேசினார். அப்போது அவர் கூறுகையில், எனக்குப் பாடப் பிடிக்கும். ஆனால் நான் பாடினால் டெர்ரிபிளாக இருக்கும் என்றார் சிரித்தபடி...

பாடுவது வேண்டுமானால் டெர்ரிபிளாக இருக்கலாம், ஆனா நீங்க 'டெர்ரிபிக்'காக இருக்கீங்களே செரீனா...!

Story first published: Thursday, August 23, 2012, 15:01 [IST]
Other articles published on Aug 23, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+