ஷரோபாவுடன் மோதிய செரீனா - 6வது முறையாக மியாமி சாம்பியன்
மியாமி: மியாமி டென்னிஸ் போட்டியில் 6வது முறையாக சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ். இறுதிப் போட்டியில் அவர் ரஷ்யாவின் மரியா ஷரபோவாவை வீழ்த்தினார்.
இருவருக்கும் இடையிலான இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ், 4-6, 6-3, 6-0 என்ற செட்களில் வெற்றி பெற்றார். முதல் செட்டை ஷரபோவாவிடம் இழந்தாலும் அடுத்த இரண்டு செட்களையும் அபாரமாக ஆடி வென்றார் செரீனா.

இது அவருக்கு 6வது மியாமி சாம்பியன் பட்டமாகும். ஒட்டுமொத்தமாக அவரது டென்னிஸ் வாழ்க்கையில் 48வது பட்டமாகும். இதற்கு முன்பு 2002, 03, 04, 07, 08 ஆகிய ஆண்டுகளில் சாம்பியனாகியுள்ளார் செரீனா. மேலும், 1999 மற்றும் 2009 ஆகிய ஆண்டுகளில் 2வது இடத்தைப் பிடித்தார்.
15 ஒற்றையர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை தன் வசம் வைத்துள்ள சாதனை வீராங்கனையான செரீனா, மியாமி வெற்றி குறித்து பெருமிதம் வெளியிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications