Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரெஞ்சு ஓபன்: 11 ஆண்டுகளுக்குப் பிறகு சாம்பியனான செரீனா...11கோடி பரிசு

பாரிஸ்: நேற்று நடைபெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியில் 6-4 என்ற வித்தியாசத்தில் செரீனா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார். இறுதி ஆட்டத்தில் ஷரபோவாவுடன் நேருக்கு நேர் மோதி செரீனா சாம்பியன் கோப்பையைக் கைப்பற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செரீனா வில்லியம்ஸ் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை வெல்வது இரண்டாவது முறையாகும். மேலும், சரியாக 11 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பிரெஞ்ச் ஓபனை வென்றுள்ளார் செரீனா.

இதற்கு முன்பு அவர் ஒரே ஒரு முறை 2002ம் ஆண்டு மட்டும் பிரெஞ்ச் ஓபனை பெற்றிருந்தார். இது இந்த சீசனில் அவர் தொடர்ச்சியாக பதிவு செய்யும் 31வது வெற்றி.

இறுதிப்போட்டி...

இறுதிப்போட்டி...

மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் கோப்பைக்கான இறுதிப் போட்டி நேற்று பாரீஸ்ஸில் நடைபெற்றது. அதில், தற்போதைய நம்பர் ஒன் வீராங்கனை அமெரிக்காவின் செரீனா வில்லியம்சுடன், நடப்பு சாம்பியனும் 2-ம் நிலை வீராங்கனையுமான ரஷியாவின் மரிய ஷரபோவா மோதினார்.

கவனமாக ஆடிய செரீனா...

கவனமாக ஆடிய செரீனா...

வெற்றிக்கனிகளையே தொடர்ந்து ருசி பார்த்து வரும் செரீனா ஆரம்பம் தொட்டே கவனமாக ஆட ஆரம்பித்தார். அதன் காரணமாக, முதல் செட்டை 6-4 என்ற அளவில் சுலபமாக கையகப்படுத்தினார்.

ஷரபோவாவின் முயற்சி பலிக்கவில்லை...

ஷரபோவாவின் முயற்சி பலிக்கவில்லை...

விழித்துக் கொண்ட ஷரபோவா அடுத்த செட்டுகளில் எவ்வளவோ போராடினார். சர்வீசில் பட்டையை கிளப்பிய செரீனா மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகம் வரை சர்வீஸ் போட்டார். அத்துடன் 10 ஏஸ் சர்வீஸ்களையும் போட்டு மிரட்டினார். எனவே, செரீனாவின் அதிரடிகளுக்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை.

சாம்பியனான செரீனா...

சாம்பியனான செரீனா...

1 மணி 46 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் முடிவில், செரீனா அந்த செட்டையும் 6-4 என்ற கணக்கில் விளையாடி சாம்பியன் கோப்பையை கைப்பற்றினார். சாம்பியன் ஆன செரீனாவுக்கு ரூ.10¾ கோடியும், 2வது இடத்தை பிடித்த ஷரபோவாவுக்கு ரூ.5½ கோடியும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. இதன்மூலம், 16வது கிராண்ட்ஸ்லாம் பட்டங்களைப் பெற்றுள்ள செரீனா, தற்போது அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற வீராங்கனைகளின் பட்டியலில் அவர் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்..

செரீனாவின் வெற்றிகள் அதிகம்...

செரீனாவின் வெற்றிகள் அதிகம்...

செரீனாவும், ஷரபோவாவும் இதுவரை நேருக்கு நேராக 16 முறை நேர் மோதியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதிகபட்சமாக 14 முறை செரீனாவே வெற்றிக்கனியை தட்டிப்பறித்துள்ளார். 2004-ம் ஆண்டுக்குப் பிறகு ஷரபோவாவிடம் ஒருமுறை கூட அவர் தோல்வியடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் வெல்வேன்...

மீண்டும் வெல்வேன்...

வெற்றிக்களிப்பில் செரீனா கூறியதாவது, ‘16 கிராண்ட்ஸ்லாம் வென்றதை என்னால் நம்ப முடியவில்லை. இதனால் ரொம்ப மகிழ்ச்சி அடைந்துள்ளேன். இங்குள்ள (பாரிஸ்) மக்கள் என் மீது மிகுந்த பாசமும், மரியாதையும் வைத்திருக்கிறார்கள். அதனால் மறுபடியும் நான் இங்கு வருவேன். அடுத்த ஆண்டும் இங்கு பட்டம் வெல்ல வேண்டும் என்று விரும்புகிறேன்' என தெரிவித்தார்.

வரலாற்று நாயகி...

வரலாற்று நாயகி...

1968ம் ஆண்டு முதல் அமெச்சூர் வீரர்களுடன் தொழில்முறை வீரர், வீராங்கனைகளும் பங்கேற்க அனுமதிக்கப்பட்ட காலம் ‘ஓபன் எரா' எனப்படுகிறது. இந்த வெற்றியின் மூலம், 31 வயது 247 நாட்கள் நிரம்பிய செரீனா ‘ஓபன் எரா' வரலாற்றில் அதிக வயதில் பிரெஞ்ச் ஓபனை வென்றவர் என்ற சிறப்பை பெற்றுள்ளார்.

Story first published: Sunday, June 9, 2013, 13:47 [IST]
Other articles published on Jun 9, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+