Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஆஸி.ஓபன் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டார் 5 முறை சாம்பியன் செரீனா

Serena Williams
மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்றவரான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் இன்று அதிர்ச்சித் தோல்வியைச் சந்தித்தார். ரஷ்யாவைச் சேர்ந்த எகதரினா மகரோவாவிடம் அவர் நேர் செட்களில் தோற்று வெளியேற்றினார்.

56வது தர வரிசையில் உள்ள மகரோவா, 6-2, 6-3 என்ற எளிதான செட்களில் செரீனாவை வீழ்த்தி அனைவரையும் அதிர வைத்தார். இந்தப் போட்டியின்போது பலமுறை டபுள் பால்ட் செய்தார் செரீனா. இதனால் மகரோவாவுக்கு வெற்றி எளிதாக வந்து சேர்ந்தது.

மகரோவாவின் டென்னிஸ் வாழ்க்கையில் இது மிகப் பெரிய வெற்றியாக மாறியுள்ளது. அதேசமயம் செரீனாவுக்கு இப்போட்டி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் காலிறுதிக்கு முன்னேறியுள்ள மகரோவா, அதில், மரியா ஷெரபாவா அல்லது சபீன் லசிக்கி ஆகியோரில் ஒருவரை சந்திப்பார்.
Story first published: Monday, January 23, 2012, 11:31 [IST]
Other articles published on Jan 23, 2012
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+