Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓ மை காட்.. செரீனா அவுட்டாயிட்டாரே...!

லண்டன்: விம்பிள்டன் சாம்பியன்ஷிப்பில் அடுத்த அதிர்ச்சியாக நம்பர் ஒன் வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சித் தோல்வியுற்று வெளியேறியுள்ளார்.

விம்பிள்டனுக்கு இந்த வருடம் நேரமே சரியில்லை. தொடர்ந்து முன்னணி வீரர்களும், வீராங்கனைகளும் அடுத்தடுத்து போண்டியாகி வருகின்றனர்.

முன்னணி வீரர்கள் யாருமே இல்லாத இறுதிப் போட்டியைக் காணும் நிலையை நோக்கி ரசிகர்கள் சென்று கொண்டுள்ளனர்.

பெடரர் இல்லை...

பெடரர் இல்லை...

ஆடவர் பிரிவில் ரோஜர் பெடரர் அதிர்ச்சித் தோல்வியுற்று அவரும் அப்செட்டாகி ரசிகர்களையும் அப்செட்டாக்கி விட்டார்.

இதுவரை 10 பேர் காலி

இதுவரை 10 பேர் காலி

இதுவரை பெடரர் உள்பட 10 முன்னணி வீரர்கள், வீராங்கனைகள் வெளியேறியுள்ளனர்.

ஷரபோவாவும் இல்லையேப்பா...

ஷரபோவாவும் இல்லையேப்பா...

மகளிர் பிரிவில் மரியா ஷரபோவா இறுதிப் போட்டி வரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் காயம் காரணமாக தோல்வியடைந்து வெளியேறியது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.

செரீனாவும் போயிட்டாரே...

செரீனாவும் போயிட்டாரே...

இந்த நிலையில் தற்போது செரீனா வில்லியம்ஸும் அவுட்டாகி விட்டார். இவர்தான் உலகின் நம்பர் ஒன் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.

4வது சுற்றோடு நடையைக் கட்டிய செரீனா

4வது சுற்றோடு நடையைக் கட்டிய செரீனா

மகளிர் ஒற்றையர் 4வது சுற்று ஆட்டத்தில் 23ம் நிலை வீராங்கனையான ஜெர்மனியின் சபீன் லிசிக்கியுடன் மோதினார் செரீனா.

முதல் செட்டிலேயே சறுக்கல்

முதல் செட்டிலேயே சறுக்கல்

முதல் செட்டிலேயே செரீனாவுக்கு சறுக்கல் காத்திருந்தது. 2-6 என்ற கணக்கில் அதை லிசிக்கியிடம் இழந்தார் செரீனா.

2வது செட்டில் சுதாரித்தார்

2வது செட்டில் சுதாரித்தார்

ஆனால் 2வது செட்டில் சுதாரித்த செரீனா அதை 6-1 என்ற கணக்கில் வென்று ஆறுதல் அடைந்தார்.

3வது செட்டில் நசுக்கிய லிசிக்கி

3வது செட்டில் நசுக்கிய லிசிக்கி

ஆனால் 3வது செட்டில் செரீனாவை முடக்கிப் போட்டு விட்டார் லிசிக்கி. அந்த செட்டை அவர் 6-4 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றியைப் பெற்றார். காலிறுதிப் போட்டிக்கும் தகுதி பெற்றார்.

செரீனாவே இல்லை.. இனி விம்பிள்டனைப் பார்த்தால் என்ன, பார்க்காட்டி என்ன...!

Story first published: Tuesday, July 2, 2013, 11:30 [IST]
Other articles published on Jul 2, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+