Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

யுஎஸ் ஓபன் டென்னிஸ் - செரீனா வில்லியம்ஸ் சாம்பியன்!

நியூயார்க் : அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.

நியூயார்க் நகரில் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது.

செரீனா- அசரென்கா மோதல்

செரீனா- அசரென்கா மோதல்

இறுதிப் போட்டியில் உலகின் முதல்நிலை வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ், இரண்டாம் நிலை வீராங்கனையான விக்டோரியா அசரென்கா ஆகியோர் மோதினர்

வென்ற செரீனா

வென்ற செரீனா

இதில் செரீனா 7-5, 6-7 (6-8), 6-1 என்ற செட் கணக்கில் வென்று சாம்பியன் பட்டம் வென்றார். இந்த வெற்றியை பெற செரீனாவுக்கு 2 மணி 45 நிமிட நேரம் தேவைப்பட்டது.

நீண்ட.......இறுதிப் போட்டி

நீண்ட.......இறுதிப் போட்டி

1980-ம் ஆண்டுக்கு பிறகு அமெரிக்க ஓபன் டென்னிஸ் பெண்கள் இறுதிப் போட்டி அதிக நேரம் நடந்த ஆட்டம் இது.

செரீனாவின் சாதனை

செரீனாவின் சாதனை

அமெரிக்க ஓபன் பட்டத்தை அதிக வயதில் வென்றவர் என்ற சாதனையையும் 31 வயதான செரீனா படைத்தார். 1973-ம் ஆண்டு மார்கர் சோர்ட் அதிக வயதில் சாம்பியன் பட்டம் பெற்றதே சாதனையாக இருந்தது.

17வது கிராண்ட்சிலாம் பட்டம்

17வது கிராண்ட்சிலாம் பட்டம்

செரீனா வில்லியம்ஸ் பெற்ற 17-வது கிராண்ட்சிலாம் பட்டம் இதுவாகும்.

அமெரிக்க ஓபன் பட்டத்தை 5வது முறையாக..

அமெரிக்க ஓபன் பட்டத்தை 5வது முறையாக..

அவர் அமெரிக்க ஓபன் பட்டத்தை 5 முறை அதாவது 1999, 2002, 2008, 2012, 2013 ஆகிய ஆண்டுகள் வென்று உள்ளார்.

ஆஸி. ஓபன் பட்டத்தையும் 5 முறை

ஆஸி. ஓபன் பட்டத்தையும் 5 முறை

இதேபோல் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தையும் 5 முறையும் பிரெஞ்சு ஓபன் பட்டத்தை 2 முறையும் விம்பிள்டன் பட்டத்தை 5 முறையும் வென்று உள்ளார் செரீனா.

ரூ24 கோடி

ரூ24 கோடி

அமெரிக்க ஓபன் சாம்பியன் பட்டம் வென்ற செரீனாவுக்கு ரூ.24 கோடி பரிசாக வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் அவர் 2 கிராண்ட் சிலாமை வென்றார். இந்த ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபன் பட்டத்தை அசரென்காவும், விம்பிள்டன் பட்டத்தை மரியான் பர்ட்டோலியும் வென்றனர்.

Story first published: Tuesday, September 10, 2013, 9:25 [IST]
Other articles published on Sep 10, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+