Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஓ மை காட்... புயலென வந்தார் ஸ்லோவன் ஸ்டீபன்ஸ் - வீழ்ந்தார் செரீனா!!

மெல்போர்ன்: சபாஷ் சரியான போட்டி... இதுதான் இன்று ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் செரீனா வில்லியம்ஸுக்கும், இளம் அமெரிக்க வீராங்கனை ஸ்லோவன் ஸ்டீபன்ஸுக்கும் இடையே நடந்த போட்டியைப் பார்த்தவர்கள் சொன்ன ஒரே வார்த்தை. அப்படி ஒரு ஆட்டம்... ஆனால் அந்தோ பரிதாபம்.. கடைசியில் செரீனா வீழ்த்தப்பட்டார்.

ஆட்டம்னா இது ஆட்டம்.. என்ன ஒரு விறுவிறுப்பு, என்ன ஒரு வேகம் நெட்டில் பார்த்த நமக்கே இப்படி என்றால் நேரில் பார்த்திருந்தால் எப்படி ஒரு விறுவிறுப்பு இருந்திருக்கும். அப்படி ஒரு அபாரமான ஆட்டம். ஒருபக்கம் செரீனா போர்க்குதிரை போல புயல் வேகமாக ஆட, மறுபக்கம் அவர் செய்த ஒவ்வொரு தவறையும் அப்படியே திருப்பிப் போட்டு துவம்சம் செய்து விட்டார் ஸ்லோவன்.

இந்த இரு அமெரிக்க மங்கைகளின் ஆட்டத்தைப் பார்த்து அத்தனை பேரும் கலங்கிப் போய் விட்டனர். அப்படி ஒரு அருமையான ஆட்டம்.

அமேஸிங் ஆட்டம்...

அமேஸிங் ஆட்டம்...

முதல் செட்டில் செரீனாவின் கையே ஓங்கியிருந்தது. ஸ்லோவன் திணறியதைக் காண முடிந்தது. இதனால் 3-6 என்ற கணக்கில் செட்டை இழந்தார் ஸ்லோவன்.

2வது செட்டில் கிளம்பிய புயல்

2வது செட்டில் கிளம்பிய புயல்

2வது செட் ஆட்டத்தில்தான் புயல் கிளம்பியது. இருவரும் மாறி மாறி அதிரடிக்குப் பாய, ஆட்டத்தில் பொறி கிளம்பியது. மாறி மாறி இருவரும் கேம்களைக் கைப்பற்றினர். இதில் கடைசியில் ஸ்லோவனுக்கே வெற்றி 7-5 என்ற கணக்கில் செட்டைப் பிடித்தார் ஸ்லோவன். விக்கித்துப் போய் விட்டார் செரீனா.

ஆட்டத்தை இழந்தார் செரீனா

ஆட்டத்தை இழந்தார் செரீனா

அதேபோல 3வது செட்டிலும் ஆட்டத்தில் அனல் பறந்தது. போர்க்குதிரையாக மாறி ஆவேச ஆட்டத்தை வெளிப்படுத்தினார் செரீனா. ஆனால் இளம் குதிரையான ஸ்லோவனும் விடவில்லை. முழு சக்தியையும் பிரயோகித்து செரீனாவை முடக்கிப் போட்டு 6-4 என்ற கணக்கில் செட்டைப் பிடித்து விட்டார். ஆட்டத்தையும் வென்றெடுத்தார்.

முதுகு வலியுடன் போராடிய செரீனா

முதுகு வலியுடன் போராடிய செரீனா

2வது செட் ஆட்டத்தின்போது செரீனாவுக்கு முதுகில் லேசான காயம் ஏற்பட்டு விட்டது. இருந்தாலும் அவர் விடவில்லை. வலியுடன் போராடியபடி ஆடினார். இந்த முதுகு வலிதான் அவரிடமிருந்து வெற்றியைப் பறித்து விட்டது என்பதே உண்மை.

பேரதிர்ச்சியில் செரீனா

பேரதிர்ச்சியில் செரீனா

5 முறை ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தை வென்றவர் செரீனா. அவருக்கு இந்தத் தோல்வி ஜீரணிக்க முடியாத ஒன்றாக மாறி விட்டது. இதை அவரது முகமும், பின்னர் அவர் அளித்த பேட்டியும் நிரூபித்தது.

புதிய இளம் புயல்

புதிய இளம் புயல்

செரீனாவை வீழ்த்திய இளம் அமெரிக்க வீராங்கனையான ஸ்லோவன் ஸ்டீபன்ஸ், செரீனாவைப் போலவே கருப்பர் இன வீராங்கனை ஆவார். செரீனாவை அவர் எதிர்கொண்ட விதம், ஆடிய ஆட்டம் அத்தனை பேரையும் கவர்ந்து விட்டது என்பதில் சந்தேகமில்லை.

செரீனாவா இருந்தால் எனக்கென்ன...

செரீனாவா இருந்தால் எனக்கென்ன...

போட்டிக்கு பின்னர் பேசிய ஸ்லோவன் கூறுகையில், செரீனாவுடன் எதிர்த்துப் போராடுகிறோம் என்பதே பெரிய விஷயம்தான்.இருந்தாலும் என்ன, செரீனாவாக இருந்தாலும் நாம் நமது ஆட்டத்தை ஆடினால் அந்தநாள் நமது நாள்தான்.அதைத்தான் நான் செய்தேன் என்றார் ஸ்லோவன்.

முடிஞ்சா வீடியோவில் போட்டியைப் பாருங்க...!

Story first published: Wednesday, January 23, 2013, 15:22 [IST]
Other articles published on Jan 23, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+