Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டி: செரீனா– அசரென்கா!

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் செரீனா வில்லியம்ஸும் விக்டோரியா அசரென்காவும் மோதுகின்றனர்.

கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் அரை இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான செரீனா வில்லியம்ஸ் 5-ம் நிலை வீராங்கனையான லீ நாவை எதிர்கொண்டார். இதில் செரீனா வில்லியம்ஸ் 6-0, 6-3 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். அவர் 6-வது முறையாக இறுதிப் போட்டியில் நுழைந்துள்ளார்.

4 முறை ஓபன் டென்னிஸ் பட்டம்!

4 முறை ஓபன் டென்னிஸ் பட்டம்!

4 முறை அவர் அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றுள்ளார். 1999, 2002, 2008, 2012-ம் ஆண்டுகளில் பட்டத்தை வென்றார்.

2 முறை இறுதியில் தோல்வி

2 முறை இறுதியில் தோல்வி

2001, 2012-ம் ஆண்டுகளில் இறுதிப் போட்டியில் தோற்றார். இம்முறை 17-வது கிராண்ட்சிலாம் பட்டத்தை வெல்லும் ஆர்வத்தில் செரீனா வில்லியம்ஸ் உள்ளார்.

2-ம் நிலை வீராங்கனை அசரென்கா

2-ம் நிலை வீராங்கனை அசரென்கா

செரீனா வில்லியம்ஸ் இறுதிப் போட்டியில் இரண்டாம் நிலை வீராங்கனையான விக்டோரியா அசரென்காவை சந்திக்கிறார்.

2வது முறையாக இறுதிப் போட்டி

2வது முறையாக இறுதிப் போட்டி

பெலாராசை சேர்ந்த அவர் அரை இறுதியில் 6-4, 6-2 என்ற நேர் செட் கணக்கில் பிளாவியா பெனாட்டை தோற்கடித்தார். அசரென்கா 2-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார்.

மீண்டும் மோதல்

மீண்டும் மோதல்

கடந்த ஆண்டை போலவே தற்போது இருவரும் இறுதிப் போட்டியில் மோதுகிறார்கள். கடந்த ஆண்டு தோற்றதற்கு இந்த முறை செரீனாவுக்கு அசரென்கா பதிலடி கொடுக்க காத்திருக்கிறார்.

Story first published: Saturday, September 7, 2013, 13:35 [IST]
Other articles published on Sep 7, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+