Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

மரியா மை டார்லிங், என்னை மன்னிச்சிடு... ஷரபோவாவுக்கு செரீனா வேண்டுகோள்!

லண்டன்: ரஷ்ய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து விமர்சித்ததற்காக அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் அமெரிக்க வீராங்கனையும், உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் புயலுமான செரீனா வில்லியம்ஸ்.

விம்பிள்டன் போட்டிகள் தொடங்கியுள்ள நிலையில் இந்த இரு வீராங்கனைகளுக்கும் இடையே மூண்ட வாய்ச்சண்டையால் ரசிகர்கள் பரபரப்படைந்துள்ளனர்.

மரியா ஷரபோவாவின் காதலர் குறித்து செரீனா எதையோ சொல்ல, கடுப்பான மரியா, முதலில் தன் முதுகைப் பார்க்கட்டும் செரீனா. பிறகு மற்றவர்களை விமர்சிக்கலாம் என காட்டமாக பேசியிருந்தார்.

மன்னித்து விடு மரியா

மன்னித்து விடு மரியா

இதையடுத்து மரியாவிடம் மன்னிப்பு கேட்டுள்ளார் செரீனா. நான் மரியா குறித்துப் பேசியதற்காக மன்னிப்பு கேட்க விரும்புகிறேன். இதை வளர்க்க விரும்பவில்லை. மரியாவைப் போலவே நானும் வருத்தப்படுகிறேன். அவரது பெயரை நான் இழுத்திருக்கக் கூடாது. அதை உணர்கிறேன். மன்னித்து விடுமரியா என்று கூறியுள்ளார்.

புண்படுத்தியது தவறு

புண்படுத்தியது தவறு

மேலும் அவர் கூறுகையில், நானே முதலில் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். அதற்கு நான் தயங்கவில்லை. என்னால் ஒருவரின் மனம் புண்படுகிறது என்றால் அதற்காக நான் வருந்துகிறேன். தவறான பேச்சுக்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.

நேரிலும் பேசி விட்டேன்

நேரிலும் பேசி விட்டேன்

தனிப்பட்ட முறையில் நான் மரியாவுடன் பேசினேன். தனிப்பட்ட முறையிலும் அவரிடம் நேரடியாக நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். திறந்த மனதுடன் அவருடன் பேசினேன். மிகவும் வருத்தப்படுவதாகவும், அவரிடம் கூறி ஸாரியும் கேட்டுக் கொண்டேன் என்று மனம் திறந்து பேசியுள்ளார் செரீனா.

மரியா பெருந்தன்மையானவர்

மரியா பெருந்தன்மையானவர்

மேலும் அவர் கூறுகையில், மரியா பெருந்தன்மையானவர். எனது மன்னிப்பை அவர் ஏற்றிருப்பார் என்றே கருதுகிறேன். மரியா என்னைப் பற்றி சொல்லியது குறித்து நான் வருத்தப்படவில்லை. நான் பேசியதால்தான் மரியா ரியாக்ட் செய்துள்ளார், அவ்வளவுதான்.

இனி டென்னிஸ் மீதுதான் கவனம்

இனி டென்னிஸ் மீதுதான் கவனம்

விம்பிள்டனுக்கு அனைவரும் டென்னிஸ் விளையாடத்தான் வந்துள்ளோம் என்று கூறியுள்ளார் மரியா. நிச்சயம் அவரது அட்வைஸை நான் ஏற்பேன். அடுத்த 2 வாரங்களுக்கு எனது கவனம் முழுவதும் டென்னிஸ் மீது மட்டுமே இருக்கும் என்றார் செரீனா.

Story first published: Tuesday, June 25, 2013, 7:21 [IST]
Other articles published on Jun 25, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+