For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அமெரிக்க ஓபன் டென்னிஸ் அரையிறுதியில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி!

By Veera Kumar

நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதி போட்டியில் செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்தார்.

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் நேற்று நடைபெற்ற அரையிறுதி போட்டியில், முதல் தரவரிசையில் உள்ள அமெரிக்க வீராங்கனை செரினா வில்லியம்ஸ், தரவரிசையில் 43 வது இடத்தில் உள்ள இத்தாலி வீராங்கனை ரொபர்ட்டா வின்சியுடன் மோதினர்.

US Open 2015: Serena Williams beaten by unseeded Roberta Vinci

இதில், 6-2 என்ற கணக்கில் முதல் செட்டை செரீனா எளிதில் வென்றார். ஆனால் அடுத்தடுத்த செட்களை, 4-6, 4-6, என்ற கணக்கில் வின்சி வென்று அசத்தினார். செரினா அதிர்ச்சி தோல்வியடைந்தார். இந்த வெற்றியின் மூலம் வின்சி முதன் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளார்.

இத்தாலி வீராங்கனையான வின்சி, மற்றொரு இத்தாலி வீராங்கனையான பெனெட்டாவை இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் எதிர்கொள்கிறார்.

இரண்டு இத்தாலி வீராங்கனைகள் கிராண்ட்ஸ்லாம் இறுதியில் மோதுவது 1968ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல்முறையாகும். செரீனா சமீபத்தில் முடிந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்று அசைக்க முடியாத பலத்தோடு விளங்கிக்கொண்டிருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Saturday, September 12, 2015, 11:15 [IST]
Other articles published on Sep 12, 2015
English summary
Italian Roberta Vinci has spectacularly ended Serena Williams' quest for an elusive calendar-year grand slam with a semi-final boilover at the US Open in New York.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X