Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

செரீனா வில்லியம்ஸ்-க்கு அப்புறம் இவர்தான்.. யூஎஸ் ஓபனை தட்டித் தூக்கிய 19 வயது இளம்பெண்!

நியூ யார்க் : யூஎஸ் ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவில் 19 வயதே ஆன கோகோ காஃப் இறுதிப் போட்டியில் வென்று கிராண்ட்ஸ்லாம் பட்டம் பெற்று அசத்தி இருக்கிறார்.

பதின்பருவ வயதுடன் கோகோ காஃப் யூஎஸ் ஓபன் இறுதிப் போட்டிக்கு நுழைந்த போதே பரபரப்பு தொற்றிக் கொண்டது. ஆனாலும், தரவரிசையில் முதல் இடத்தை நோக்கி வேகமாக முன்னேறி வரும் அரினா சபலென்காவை காஃப் வீழ்த்துவது கடினம் என்றே பலரும் எண்ணினர்.
ஆனால், அந்த எண்ணத்தை அடித்து உடைத்த கோகோ காஃப் 2 - 6, 6 - 3, 6 - 2 என்ற செட் கணக்கில் அரினாவை வீழ்த்தி யூஎஸ் ஓபன் கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ளார்.

US Open 2023 : Coco Gauff beat Aryna Sabalenka to become Grandslam champion

இதற்கு முன், 1999ஆம் ஆண்டு, தன் 18 வயதில் செரீனா வில்லியம்ஸ் யூஎஸ் ஓபன் பட்டத்தை வென்று சாதனை புரிந்து இருந்தார். அப்போது அவர் புகழ் பெற்ற மார்ட்டினா ஹிங்கிஸ்-ஐ வீழ்த்தி கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று இளம் வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையை செய்து இருந்தார்.
அவருக்கு அடுத்து தற்போது பதின்பருவ வயதில் கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற மகளிர் வீராங்கனை கோகோ காஃப்தான்.

இந்தப் போட்டியில் கடைசி வெற்றிப் புள்ளியை பெற்றவுடன் கீழே விழுந்து தன் வெற்றியை நம்ப முடியாமல் ஆனந்தக் கண்ணீரில் மிதந்தார். தன் குடும்பத்தினருக்கு அங்கிருந்தே தொலைபேசியில் பேசினார். அவரது தாய் தன் மகளின் வெற்றியை கண்டு மகிழ்ச்சியில் துள்ளிக் குதிடத்தார்.

Story first published: Sunday, September 10, 2023, 8:20 [IST]
Other articles published on Sep 10, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+