ஆட்டத்தின் போது திடீர் மயக்கம்… என்னன்னு தெரியலையே... வெளியேறிய செரீனா.. ரசிகர்கள் சோகம்
கலிபோர்னியா:அமெரிக்காவின் இந்தியன் வெல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் விலகியுள்ளார்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் மைதானத்தில், பிஎன்பி பாரிபாஸ் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. மகளிர் ஒற்றையர் பிரிவு போட்டியின் மூன்றாவது சுற்று நடைபெற்றது.
அமெரிக்க நட்சத்திர வீராங்கனையும், 23 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவருமான செரீனா வில்லியம்ஸ், வெனிசுலா வீராங்கனை கார்பைன் முருகுசாவை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே சிறப்பாக ஆடிய செரீனா வில்லியம்ஸ், முருகசாவை திணறடித்தார். முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் அவர் கைப்பற்றினார்.

உடல்நலக் கோளாறு
அதன் பின்பு திடீரென அவருக்கு உடல்நலக் கோளாறு ஏற்பட்டது. இதையடுத்து, போட்டியில் இருந்தும், தொடரிலிருந்தும் பாதியிலேயே விலகுவதாக அறிவித்தார்.

மீண்டும் ஆட்டம்
செரீனா வில்லியம்ஸ் கடைசியாக 2017ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் தொடரில் அவரது சகோதரியான வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தினார். அதன் பின், குழந்தைக்கு தாயான அவர் மீண்டும் களத்திற்கு திரும்பினார்.

இறுதியில் தோல்வி
விம்பிள்டன் மற்றும் அமெரிக்கன் ஓபன் டென்னிஸ் தொடர்களின் இறுதி போட்டி வரை முன்னேறி பின்னர் தோல்வியடைந்தார். அண்மையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரிலும் காலிறுதிச் சுற்றோடு நடையை கட்டினார்.

வெளியேற்றம்
தற்போது உடல்நலக்குறைவால் இந்தியன் வெல்ஸ் தொடரிலிருந்தும் செரீனா வில்லியம்ஸ் பாதியிலேயே வெளியேறி இருப்பதால் அவரது ரசிகர்கள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். இதுகுறித்து, செரீனா கூறியதாவது:

திடீர் மயக்கம்
ஆட்டம் தொடங்குவதற்கு முன்பே நான் சோர்வுற்று இருந்தேன். ஆட்டம் தொடங்கிய பின் மயக்கம் அதிகமானது. சோர்வு அதிகமானதால் பாதியிலேயே வெளியேறும் சூழல் உண்டானது என்றார்.


Click it and Unblock the Notifications