ரோஜரின் சாதனையை "ஸ்டால்" செய்த ஜோகோவிக்..."பெக்கரால்" தோற்ற பெடரர்!
விம்பிள்டன்: பல கோடி கண்கள் நேற்று ஏமாற்றத்தில் துளிர்த்துப் போய் விட்டன. விம்பிள்டனில் பெடரர் பெரும் சாதனை நிகழ்த்துவார் என்ற கணிப்பு பொய்த்துப் போனதால் வந்த ஏமாற்றம் இது. பெடரரை வீழ்த்தி விம்பிள்டன் ஒற்றையர் ஆடவர் பட்டத்தை வென்று விட்டார் நோவாக் ஜோகோவிக்.
7 முறை விம்பிள்யன் சாம்பியன் ஆனவர் பெடரர். ஆனால் நேற்று பெடரரின் பிரமாதம் செல்லுபடியாகாமல் போய் விட்டது. 3வது முறையாக விம்பிள்டன் பட்டத்தை நேற்று சுவைத்தார் ஜோகோவிக்.
மேலும் கடந்த முறை வென்ற பட்டத்தையும் ஜோகோவிக் தக்க வைத்துக் கொண்டார். நேற்று நடந்த விறுவிறுப்பான போட்டியில், 7-6 (7-1), 6-7 (10-12), 6-4, 6-3 என்ற செட் கணக்கில் ஜோகோவிக் வென்று பட்டத்தைத் தட்டிச் சென்றார்.

3வது விம்பிள்டன் பட்டம்
இது ஜோகோவிக்கு 3வது விம்பிள்டன் பட்டமாகவும், மொத்தத்தில் 9வது கிராண்ட் ஸ்லாம் பட்டமாகவும் அமைந்தது.

பெக்கர் பார்வையில்
செர்பியாவைச் சேர்ந்த 28 வயதான ஜோகோவிக்கின் இந்த வெற்றிக்குப் பின்னால் முன்னாள் சாம்பியன் போரிஸ் பெக்கர் முக்கியமாக உள்ளார். இவர்தான் ஜோகோவிக்கின் தற்போதைய பயிற்சியாளர் ஆவார்.

சோகத்தில் பெடரர்
மறுபக்கம் பெடரர் பல சாதனைகளை தவற விட்ட சோகத்தில் காணப்பட்டார். நேற்று அவர் வெற்றி பெற்றிருந்தால் அதிக வயதில் சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் வீரராக உருவெடுத்திருப்பார். மேலும் 8 முறை விம்பிள்டன் பட்டத்தை வென்ற முதல் வீரராகவும் உருவெடுத்திருப்பார்.

பிரமாதமாக சமாளித்த ஜோகோவிக்
கிட்டத்தட்ட 3 மணி நேரம் நடந்த இந்தப் போட்டியில் சுவிட்சர்லாந்தின் பெடரரை மிகப் பிரமாதமாக சமாளித்து கரையேறினார் ஜோகோவிக். வெற்றிக்குப் பின்னர் அவர் கூறுகையில், ரோஜருக்கு எதிராக விளையாடுவது மிகப் பெரிய சவால். அதில் வெல்வது எப்போதுமே மகிழ்ச்சிகரமானது என்றார்.

ஜோகோவிக் ஆண்டு
உண்மையில் இந்த ஆண்டு ஜோகோவிக்கின் ஆண்டாக இரு்ந்து வருகிறது. இந்த ஆண்டு இதுவரை 48 போட்டிகளை வென்றுள்ளார் ஜோகோவிக். 3 போட்டிகளில் மட்டுமே அவர் தோற்றுள்ளார்.

மகிழ்ச்சியில் பெக்கர்
ஜோகோவிக்கின் தற்போதைய பயிற்சியாளரான முன்னாள் ஜாம்பவான் போரிஸ் பெக்கர், ஜோகோவிக்கின் வெற்றியால் மகிழ்ச்சி அடைந்தார். தனது மகிழ்ச்சியை ஜோகோவிக்கின் மனைவி செலீனாவுக்குக் கை குலுக்கிப் பகிர்ந்து கொண்டார் பெக்கர்.

செரீனா வாக்கு பலிக்காமல் போச்சே
நேற்று முன்தினம்தான் மகளிர் ஒற்றையர் பட்டத்தை அதிக வயதில் வென்ற சாதனையைப் படைத்திருந்தார் செரீனா வில்லியம்ஸ். தன்னைப் போலவே, பெடரரும் சாதனை படைப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்திருந்தார். ஆனால் அது பலிக்காமல் போய் விட்டது.
பெக்கரால் வென்றாரோ இல்லையே, பெடரரை விட் பெட்டராக ஆடினார் ஜோகோவிக் என்பதில் சந்தேகம் இல்லை.


Click it and Unblock the Notifications