Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம்.. செரீனா வில்லியம்ஸை அதிரடியாக வீழ்த்தி சாம்பியனான சிமோனா

லண்டன்: விம்பிள்டன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதி போட்டியில், அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் அதிர்ச்சி தோல்வியுற்றார்.

இன்று நடைபெற்ற இறுதி போட்டியில் முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸை, ருமேனியா வீராங்கனை சிமோனா ஹாலெப் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றார்.

Wimbledon Tennis .. Simona beats Serena Williams and win Wimbledon title

போட்டியின் துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப், முன்னணி வீராங்கனை செரீனா வில்லியம்ஸை திணறடித்தார். சிமோனாவின் ஆட்டத்திற்கு முன் ஈடுகொடுக்க முடியாத செரீனாவை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இறுதியில் செரீனா வில்லியம்ஸை 6-2, 6-2 என்ற நேர் செட் கணக்கில் அதிரடியாக வீழ்த்தினார் சிமோனா ஹாலெப். விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடரில், ருமேனியா நாட்டை சேர்ந்த சிமோனா ஹாலெப் சாம்பியன் பட்டம் பெறுவது இதுவே முதல் முறையாகும்.

Wimbledon Tennis .. Simona beats Serena Williams and win Wimbledon title

கிராண்ட் ஸ்லாம் போட்டிகளின் மகளிர் ஒற்றையர் பிரிவில் 21 சாம்பியன் பட்டங்களை வென்று மகத்தான சாதனையாளராக விளங்கிய செரீனாவை அதிரடியாக வீழ்த்திய சிமோனா ஹாலெப்பிற்கு பாராட்டுகள் குவிகின்றன.

Story first published: Saturday, July 13, 2019, 20:39 [IST]
Other articles published on Jul 13, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+