Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10வது ஐபிஎல் கிரிக்கெட்: முதல் சிக்ஸ், முதல் விக்கெட் என்ற பெருமையை பெற்றார் டேவிட் வார்னர்!

ஹைதராபாத்: 10வது ஐபிஎல் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ஆடி வருகின்றன. இந்த சீசனின் முதல் விக்கெட்டாக ஹைதராபாத் அணியின் டேவிட் வார்னர் ஆட்டமிழந்ததுள்ளார்.

10வது ஐபிஎல்லின் முதல் போட்டி ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

10th IPL series first wicket is David warner

இதைத்தொடர்ந்து பேட்டிங்கை தொடங்கிய சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்களாக அந்த அணியின் டேவிட் வார்னரும், ஷிகர் தவனும் களமிறங்கினர்.

தொடக்கம் முதலே அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்டுள்ளனர். போட்டியின் இரண்டாவது ஓவரில் கேப்டன் டேவிட் வார்னர் சவுத்ரியின் பந்தில் மந்தீப் சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.

இதன் மூலம் பத்தாவது ஐபிஎல் போட்டித் தொடரின் முதல் விக்கெட் என்ற பெருமையை டேவிட் வார்னர் பெற்றுள்ளார். முதல் விக்கெட் மட்டுமின்றி முதல் இந்த தொடரின் முதல் சிக்ஸர் அடித்தவர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரர் ஆகியுள்ளார் டேவிட் வார்னர்.

சவுத்ரி பந்துவீச்சில் தனது முதல் சிக்ஸை அடித்த டேவிட் வார்னர் 10வது ஐபிஎல்லின் முதல் சிக்ஸையும் பதிவு செய்துள்ளார்.

Story first published: Thursday, April 6, 2017, 1:53 [IST]
Other articles published on Apr 6, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+