Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

10வது ஐபிஎல்: 2வது வெற்றியை பெறுமா ஹைதராபாத்? தோல்வியில் இருந்து மீளுமா குஜராத்?

ஹைதராபாத்: பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தும் குஜராத் லயன்ஸ் அணிகளும் மோதுகின்றன. இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் இரண்டாவது போட்டியாகும்.

ஹைதராபாத் ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் இந்த போட்டிகள் நடைபெறுகின்றன. இதில் நடப்பு சாம்பியன் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி பலம் வாய்ந்த பெங்களூரு அணியை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது.

10th IPL: Sunrisers Hyderabad vs Gujarat lions to at Hyderabad

இதனிடையே ஏற்கனவே கொல்கத்தா நைட் ரைடர்ஸுடன் மோதிய சுரேஷ் ரெய்னா தலைமையிலான குஜராத் லயன்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் குஜராத் லயன்ஸ் அணியும் இன்று மோதுகின்றன.

இதில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் உள்ள சன்ரைசர்ஸ் அணி 2வது வெற்றியை பெற வேண்டும் என்ற நோக்கத்திலும், தோல்வியில் இருந்து மீண்டெழ வேண்டும் என்ற நோக்கத்தில் குஜராத் அணியும் உள்ளது.

இவ்விரு அணிகளும் மோதும் போட்டி இன்று மாலை நான்கு மணிக்கு தொடங்குகிறது. சன் ரைசர்ஸ் அணியில் கேப்டன் டேவிட் வார்னர், டான்மே அகர்வால், ரிக்கி புய், பிபுல் ஷர்மா, பென் கட்டிங், ஷிகர் தவான், திவேதி, ஹென்ரிக்ஸ், ஹுடா, ஜோர்டான், சித்தார்த் கவுல், புவனேஷ் குமார், பென் லாக்லின், அபிமன்யு மிதுன், முகமது நபி, முகமது சிராஜ், முஸ்தபிஜுர் ரஹ்மான், ஆஷிஷ் நெஹ்ரா, ஓஜா, ரஷித் கான், விஜய் சங்கர், ப்ரீந்தர் ஸ்ரன், பிரவீன் டாம்பே, கேன் வில்லியம்சன், யுவராஜ் சிங் ஆகியோர் விளையாடவுள்ளனர்.

இதேபோல் குஜராத் அணியில் கேப்டன் சுரேஷ் ரெய்னா, அகாஷ்தீப் நாத், சுப்காம் அகர்வால், பாசில் தம்பி, டுவைன் பிராவோ, சிராக் சுரி, பால்க்னர், ஆரோன் பின்ச், மனபிரீத் கோனி, இஷான் கிஷான், ரவீந்திர ஜடேஜா, ஜகாதி, தினேஷ் கார்த்திக், ஷிவில் கவுஷிக், குல்கர்னி,பிரவீண் குமார், பிரண்டன் மெக்கலம், முனாப் படேல், பிரதம் சிங், ஜேசன் ராய், பிரதீப் சங்வான், ஜாதவ் ஷா, ஷவ்ரியா, நாது சிங், டுவைன் ஸ்மித், தேஜஸ் பரோகாஇ ஆண்ட்ரி டை ஆகியோர் உள்ளனர்.

Story first published: Sunday, April 9, 2017, 15:36 [IST]
Other articles published on Apr 9, 2017
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+