Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

1987ல் பிறந்த கேப்டனே உலகக்கோப்பையை வெல்வார்.. விஞ்ஞான ஜோதிடர் லோபோ கணிப்பு.. யார் அந்த கேப்டன்?

மும்பை: ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரை 1987ஆம் ஆண்டு பிறந்த கேப்டன் ஒருவரே கைப்பற்றுவார் என்று பிரபல விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார்.

இந்தியாவில் 4வது முறையாக ஐசிசி உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கவுள்ளது. அதில் நாளை முதல் நவ.19ஆம் தேதி வரை லீக் போட்டிகள் நடக்கவுள்ளது. மொத்தமாக 10 மைதானங்களில் 45 லீக் போட்டிகள் நடக்கவுள்ளது. அதில் முக்கியமான அக்.14ஆம் தேதி இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. சொந்த மண்ணில் நடக்கும் உலகக்கோப்பை என்பதால் இந்தியா மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

1987 Born captain will won the ICC World Cup 2023 says Scientific Astrologer Greenstone Lobo

ஏனென்றால் 2011ல் சொந்த மண்ணில் ஆடிய இந்தியாவும், 2015ல் சொந்த மண்ணில் ஆடிய ஆஸ்திரேலியாவும், 2019ல் சொந்த மண்ணில் ஆடிய இங்கிலாந்து அணியும் உலகக்கோப்பையை வென்றன. இதனால் இந்திய அணி 10 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஐசிசி கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் உலகக்கோப்பை தொடரை வெல்லும் என்று பிரபல விஞ்ஞான ஜோதிடர் கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். இவர் ஏற்கனவே டென்னிஸ் மற்றும் கால்பந்து உலகக்கோப்பை தொடர்களை வென்ற வீரர்கள் மற்றும் அணிகளை சரியாக கணித்தவர். அதேபோல் 2011, 2015 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் கிரிக்கெட் உலகக்கோப்பையை யார் வெல்வார்கள் என்பதையும் சரியாக கணித்துள்ளார்.

இதற்கு முன்பாக டென்னிஸ் போட்டிகளில் அதிக கிராண்ட்ஸ்லாம் தொடர்களை 1986ல் பிறந்த ரஃபேல் நடால் வெல்வார் என்று கணித்தார். அதன்படி ரோஜர் ஃபெடரர் சாதனை நடால் முறியடித்தார். அதன்பின் 1986ல் பிறந்தவர்களின் சாதனையை 1987ல் பிறந்தவர்கள் முறியடிப்பார்கள் என்று கூறியிருந்தார். அதன்படி 1986ல் பிறந்த நடாலின் சாதனையை, 1987ல் பிறந்த ஜோகோவிச் முறியடித்தார். அதேபோல் 2018 கால்பந்து உலகக்கோப்பையின் போது 1986ல் பிறந்த கேப்டன் வெல்வார் என்று கணித்தார். அதன்படி 1986ல் பிறந்த ஹூயுகோ லோரிஸ் தலைமையிலான பிரான்ஸ் அணி வென்று அசத்தியது.

அதேபோல் கடந்த ஆண்டு நடைபெற்ற 2022 கால்பந்து உலகக்கோப்பையின் போது 1987ல் பிறந்தவர்கள் வெல்வார்கள் என்று கிரீன்ஸ்டோன் லோபோ கணித்தார். அதன்படி 1987ல் பிறந்த லயோனல் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி உலகக்கோப்பையை வென்றது. அதேபோல் 2019ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கோப்பையின் போது 1986ல் பிறந்த கேப்டன் வெல்வார் என்று கணித்தார். அதன்படி 1986ல் பிறந்த இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி வென்றது.

தற்போது உலகக்கோப்பை தொடர் தொடங்கவுள்ள நிலையில் 1987ல் பிறந்த கேப்டன் வெல்வார் என்று கிரீன்ஸ்டோன் லோபோ கணித்துள்ளார். அதன்படி பார்த்தால், வங்கதேச அணி கேப்டன் ஷகிப் அல் ஹசன் 1987, மார் 24ஆம் தேதி பிறந்துள்ளார். அதேபோல் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 1987, ஏப்ரல் 30ஆம் தேதி பிறந்துள்ளார். இதனால் இந்தியா உலகக்கோப்பையை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, October 4, 2023, 7:20 [IST]
Other articles published on Oct 4, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+