Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

2 முறை சாம்பியன் வெஸ்ட் இண்டீஸ் நாக் அவுட் - அயர்லாந்து வெளுத்து வாங்கியது.. மாறும் வரலாறு

ஹாபர்ட் : டி20 உலககோப்பை கிரிக்கெட் தொடரிலிருந்து 2 முறை சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் சுற்றிலேயே வெளியேறியது.

இதன் மூலம் கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனையடுத்து கத்துக்குட்டி அணியாக கருதப்படும் அயர்லாந்து அணி சூப்பர் 12 சுற்றுக்கு 13 ஆண்டுகளுக்கு பிறகு தகுதி பெற்றுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 2007ஆம் ஆண்டு டி20 உலககோப்பைக்கு பிறகு முதல் முறையாக முதல் சுற்று உடன் வெளியேறி இருக்கிறது. வாழ்வா சாவா என்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணி, தனது கடைசி லீக் ஆட்டத்தில் அயர்லாந்தை எதிர்கொண்டது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

தடுமாற்றம்

தடுமாற்றம்

இதனையடுத்து தொடக்க வீரராக களமிறங்கிய கையில் மெயர்ஸ் 1 ரன்னில் ஆட்டமிழக்க,சார்லஸ் 24 ரன்களிலும், எவன் லீவிஸ் 13 ரன்களிலும் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பூரான் 13 ரன்களிலும், அதிரடி வீரர் பொவேல் 6 ரன்களிலும் வெளியேற, வெஸ்ட் இண்டீஸ் அணி 112 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

கிங்கின் அதிரடி

கிங்கின் அதிரடி

இதனைத் தொடர்ந்து தனி ஆளாக நின்று போராடிய பிராண்டன் கிங், அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தார். 48 பந்துகளை எதிர்கொண்ட கிங் 62 ரன்களை விளாசினார். இதனையடுத்து ஒடியன் ஸ்மித் 2 இமாலய சிக்சர்களை விளாசி 19 ரன்கள் குவிக்க, வெஸ்ட் இண்டீஸ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் எடுத்தது.

அதிரடி தொடக்கம்

அதிரடி தொடக்கம்

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அயர்லாந்து அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தது. கேப்டன் பால் ஸ்டிரிங், பால்பிரின் ஜோடி அதிடியாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 73 ரன்கள் சேர்த்தது. கேப்டன் பால்பிரின் 37 ரன்கள் எடுக்க, பால் ஸ்டிரிங் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 48 பந்துகளில் 66 ரன்கள் குவித்தார்.

சூப்பா 12க்கு தகுதி

சூப்பா 12க்கு தகுதி

மறுபுறம் டக்கர் 35 பந்தில் 45 ரன்கள் எடுக்க அயர்லாந்து அணி 17.3 வது ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை கடந்தது. இதன் மூலம் அயர்லாந்து அணி 4 புள்ளிகள் பெற்று சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இதனிடையே வெஸ்ட் இண்டீஸ் அணியில் ரஸில், சிம்ரன், உள்ளிட்ட முக்கிய வீரர்கள் இல்லாமல் களமிறங்கியது பெரும் பின்னடைவாக அந்த அணிக்கு அமைந்துள்ளது.

Story first published: Friday, October 21, 2022, 13:17 [IST]
Other articles published on Oct 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+